எளிமையான ரன்அவுட் வாய்ப்பு இருந்தும் மனிதாபிமானம் தான் முக்கியம் – ரசிகர்களை கவர்ந்த வைரல் வீடியோ

Runout
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போல உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ளூர் டி20 போட்டி தொடர்கள் நடைபெற்று வரவேற்பை பெறுகின்றன. அதனை போன்று தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் டி20 தொடர் ஒன்றில் பார்ல் ராக்ஸ் அணியும் நெல்சன் மண்டேலா பே ஜெயன்ஸ் அணியும் மோதின.




- Advertisement -

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய அணி மண்டேலா அணி 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்சன் மண்டேலா அணி இலக்கை விரட்டத் தொடங்கியது. இறுதியில் 8 பந்துகளில் 24 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இலங்கை வீரர் உதானா பந்துவீசி கொண்டிருந்தபோது எதிரணி வீரர் அடித்த ஷாட் ஒன்று சக வீரர் மீது கையில் பலமாக அடித்தது.

பந்து கையில் பட்டதும் வலியால் தடுமாறி கீழே விழுந்த பேட்ஸ்மேன் அங்கிருந்து வலியால் துடித்துக்கொண்டு கிரீஸை நோக்கி செல்ல முயன்றார். கிரீசை விட்டு வெளியே நீண்ட தூரத்தில் பேட்ஸ்மேன் வலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது பந்து வீச்சாளர் எளிதாக ரன்அவுட் செய்து இருக்கலாம் ஆனாலும் பந்து பட்டு வலியால் துடித்துக் கொண்டிருக்கும் வீரரை அவர்கள் செய்யாமல் அங்கிருந்து சென்றார் உதானா.

அதன்பின்னர் பேட்ஸ்மேன் மீண்டும் கிரீசுக்குள் வந்தார். உதானாவின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement