நேற்று ஸ்டோக்ஸ் இன்னைக்கு இவரா ? 33 வயதில் திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியளித்த – இலங்கை வீரர்

sl
- Advertisement -

இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான பென் ஸ்டோக்ஸ் நேற்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு அறிவிப்பினை தனது 30 ஆவது வயதிலேயே அறிவித்ததால் ரசிகர்கள் பெருமளவில் அதிர்ச்சி அடைந்திருந்தனர். இந்நிலையில் அந்த வருத்தத்தில் இருந்து மீளாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு முன்னணி வீரரான இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் 33 வயதில் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு அதிரடி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Hasaranga-1

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில் விளையாடிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் இசுரு உதானா ஒருநாள் போட்டிகளின் போது தனது மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அதனை தொடர்ந்து தற்போது திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் கூறியுள்ளார். இதனை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை அணியின் வர்ணனையாளர் ரோஷன் இசுரு உதானா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதை இப்பொழுது தான் அறிந்து கொண்டேன். இலங்கை அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக அவர் சிறப்பான செயல்பாட்டின் மூலம் பெருமை அளித்துள்ளார்.

அவருக்கு வாழ்த்துக்கள் என்று அதனை உறுதி செய்துள்ளார். 33 வயதான இசுரு உதானா 21 ஒருநாள் போட்டிகள், 35 டி20 போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு விளையாடிய அவர் இந்த ஆண்டு அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதுவரை வெவ்வேறு டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 174 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இசுரு உதானா விளையாட மாட்டார் என்பது இலங்கை அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Advertisement