இந்திய அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு. அணியில் இருந்து விலகிய மற்றொரு நட்சத்திர வீரர் – விவரம் இதோ

Ind-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

Ind-lose

அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை துவங்க உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ஏற்பட்ட தோல்வியினால் துவண்டு கிடக்கும் இந்திய அணிக்கு மற்றொரு பின்னடைவாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இரண்டாவது போட்டியில் இருந்து விலகி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முதல் டெஸ்டில் 5 விக்கெட் வீழ்த்திய இசாந்த் சர்மா அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். தற்போது அவர் விலகி இருப்பது இந்திய அணிக்கு நிச்சயம் பெரிய பின்னைடைவு தான். ஏற்கனவே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரில் இடம் பெறுவாரா என்று எதிர்பார்த்த நிலையில் அவர் கடைசி நேரத்தில் அணியில் இடம்பிடித்தார்.

Ishanth

ஆனால் மீண்டும் அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது இந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே அவர் தலை சுற்றல், தலைவலி, சோர்வு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாக அவர் வெளிப்படையாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இரண்டாவது போட்டியில் இருந்து இஷாந்த் விலகி இருப்பதை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement