அமித் மிஸ்ராவை தொடர்ந்து காயம் காரணமாக டெல்லி அணியில் இருந்து வெளியேறிய வீரர் – விவரம் இதோ

Iyer
- Advertisement -

நடப்பாண்டின் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றில் கிட்டத்தட்ட பாதி போட்டிகளில் அனைத்து அணிகளும் பங்கேற்று முடித்துவிட்டனர். தொடரும் திட்டமிட்டபடி சரியாக சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஒரே ஒரு பாதிப்பாக வீரர்கள் அடிக்கடி காயமடைந்து வெளியேறி வருகிறார்கள்.

Dubai

அந்த வகையில் ஏற்கனவே சன் ரைசர்ஸ் அணியின் மிச்செல் மார்ஷ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் காயம் காரணமாக நாடு திரும்பினார். அதுமட்டுமின்றி டெல்லியில் அமித் மிஸ்ரா காயம் காரணமாக நாடு திரும்பினார். அவர்களை அவர்களைத் தவிர ரசல், ரிஷப் பண்ட், ராயுடு, சுனில் நரைன் என பல்வேறு வீரர்களும் காயம் காரணமாக அவ்வப்போது போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது டெல்லி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா தற்போது காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டில்லி அணி சார்பில் வெளியான அறிவிப்பில் பயிற்சியின்போது இஷாந்த் ஷர்மா பயிற்சியின் போது ஏற்பட்ட வலியினால் பந்துவீச சிரமப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ishanth

மேலும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் முடிவில் அவரின் விலா பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ishanth 1

இந்த தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் விளையாடி இருந்த இஷாந்த் சர்மா விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 26 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார் . டெல்லி அணியில் ஏற்கனவே ரிஷப் பண்ட் காயம் காரணமாக ஒரு வார கால ஓய்வில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement