ஆசியாவுக்கு வெளியே நான்தான் கெத்து என்பதை நிரூபித்த இஷாந்த் ஷர்மா – முழு விவரம் இதோ

Ishanth-2
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வரும் இஷாந்த் சர்மா ஒரு வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அது யாதெனில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் ஆசிய கண்டத்தை தாண்டி வெளியே விளையாடப்படும் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை இதுநாள்வரை கபில்தேவ் வைத்திருந்தார். 45 போட்டிகளில் 155 விக்கெட்டுகளை ஆசிய கண்டத்திற்கு வெளியே கபில்தேவ் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் அந்த சாதனையை இஷாந்த் சர்மா கடந்துள்ளார். தற்போது ஆசிய கண்டத்திற்கு வெளியே 156 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இஷாந்த் ஷர்மா படைத்தார்.

ஜாகீர் கான் 147 விக்கெட்டுகளையும், ஷமி 101 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியக் கண்டத்திற்கு வெளியே சுழற்பந்து வீச்சாளராக கும்ப்ளே 200 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement