காயம் காரணமாக இங்கிலாந்து தொடருக்கான அணியில் இருந்து வெளியேறவுள்ள இந்திய வீரர் – அதிர்ச்சி தகவல்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியிருக்கிறது நியூசிலாந்து அணி. இப்போட்டியின்போது கைவிரலில் காயமடைந்த இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஒருவர், அடுத்து வரும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே இந்த இறுதிப் போட்டியில் தோல்வி பெற்றதால் மனதளவில் பாதிப்பை சந்தித்திருக்கும் இந்திய அணிக்கு, அடுத்து வரும் இங்கிலாந்து தொடருக்கு முன்பாகவே முக்கியமான வேகப் பந்து வீச்சாளர் ஒருவரும் காயமடைந்திருப்பது மேலும் பின்னடைவை கொடுத்திருக்கிறது.

ishanth 1

- Advertisement -

காயமடைந்திருக்கும் அவருக்குப் பதிலாக மற்றொரு இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியின் நான்காவது இன்னிங்சில், ராஸ் டெய்லர் அடித்த பந்தை அந்த ஓவரை வீசியே இஷாந்த் சர்மாவே பிடிக்க முயன்றார். அப்போது அவருக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை மேற்கொள்வதற்காக அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறி விட்டார். அந்த ஓவரில் மீதமிருந்த பந்துகளை மற்றொரு வீரரான ஜாஸ்பிரித் பும்ரா தான் வீசி முடித்தார்.

அதனைத் தொடர்ந்து இஷாந்த் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் எந்த அளவில் இருக்கிறது என்ற தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராஜல் அரோரா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இஷாந்த் சர்மாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ishanth

ராஜல் அரோரா பதிவிட்டிருக்கும் அந்த புகைப்படத்தில், இஷாந்த் சர்மாவின் இரண்டு விரல்களிலும் பேண்டேஜ்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதைப் பார்க்கும்போது காயத்தின் அளவு பெரிதாக இருப்பதாகவே தெரிகிறது. இங்கிலாந்து தொடருக்கு இன்னும் ஆறு வாரங்கள் இருப்பதால் அதற்குள்ளாக அவருடைய காயம் சரியாகிவிடுமா என்று தெரியவில்லை. இதனால் இஷாந்த் சர்மா அடுத்துவரும் இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை அவர் குணமாகவில்லையென்றால் அவருக்குப் பதிலாக மற்றொரு இளம் வீர்ரான முஹம்மது சிராஜிக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

ishanth 2

இங்கிலாந்து ஆடுகளங்களில் மிகச் சிறப்பாக பந்து வீசி இருக்கும் இஷாந்த் சர்மா, அடுத்து வரும் தொடரில் விளையாடவில்லையென்றால் அது இந்திய அணிக்கு மிகப் பெரிய இழப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேசமயம் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமான முஹம்மது சிராஜும், வாய்ப்பு கிடைக்கும் போட்டிகளில் எல்லாம் மிகச் சிறப்பாக பந்து வீசி, தேவையான நேரங்களில் விக்கெட் எடுத்து தருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement