இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார்.27000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து 82 சதங்கள் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அப்படிப்பட்ட அவரை அனைவரும் கிங் கோலி, நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று பாராட்டி அழைப்பது வழக்கமாகும்.
இந்நிலையில் உங்களுக்குத்தான் விராட் கோலி எனக்கு அவன் சீக்கு என்று இந்திய வீரர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். ஏனெனில் அந்தளவுக்கு 16 வயது முதல் தாங்கள் ஆழமான நட்பை கொண்டிருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “வெளியில் இருப்பவர்களுக்கு தான் விராட் கோலி ஒரு நட்சத்திர வீரர். ஆனால் என்னால் அவரை அப்படி பார்க்க முடியாது”
உங்களுக்கு விராட் கோலி:
“ஏனெனில் நாங்கள் அண்டர்-16 அளவிலிருந்தே ஒன்றாக விளையாடி வருகிறோம். அவர் என்னுடைய பாலிய சிநேகிதன். அண்டர்-19 அளவில் விளையாடிய போது நாங்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கிறோம் என்று எண்ணுவோம். அதை வைத்து சாப்பிடுவோம். விராட் கோலி மற்றவர்களுக்கு ஒரு மாதிரியானவர். ஆனால் எனக்கு வித்தியாசமானவர்”
“உங்களுடைய சகோதரர் பெரிய உச்சத்தை தொட்டு விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்போது அனைவரும் அவர் சிறந்தவர் என்று நினைப்பார்கள். ஆனால் நாளின் இறுதியில் அவர் மிகவும் மனிதாபிமானம் மிக்கவர். அவருடன் நீங்கள் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளீர்கள். எனவே அவரைப் பற்றி உள்ளேயும் வெளியேயும் தெரியும். அவர் எங்கிருந்து வந்தார், எப்படி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும்”
எனக்கு சீக்கு:
“இப்போதெல்லாம் நாங்கள் நேராக சந்திக்கும் போது எப்படி இந்தியாவுக்காக இவ்வளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினோம் என்பது பற்றி பேச மாட்டோம். மாறாக வேடிக்கையான நகைச்சுவைகளை பேசுவோம். அதையும் இதையும் பற்றி ஜாலியாக பேசி சிரிப்போம். அதனால் அவரை விராட் கோலி என்று நான் எப்போதும் கருத மாட்டேன்”
இதையும் படிங்க: இனிமேல் டிக்கெட் வேணும்ன்னா போன் பண்ணுவேன்.. ரோஹித்துக்கு ஜாம்பவான் டிராவிட் சொன்ன கலக்கல் வாழ்த்து
“உங்களுக்கு தான் அவர் விராட் கோலி. எங்களுக்கு அவன் சீக்கு. அப்படித்தான் நான் அவரைப் பார்க்கிறேன். அவர் என்னை அப்படித்தான் பார்ப்பார். சிறுவயதில் நாங்கள் ஒன்றாக ஒரே அறையில் தங்கி தூங்கி வளர்ந்தோம். விராட் கோலிக்கு முன்பாகவே இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது என்னுடைய பின்னே உதைத்த அவர் உண்மையாகவே நீ எல்லாம் இந்தியாவுக்கு விளையாடப் போகிறாயா? என்று கேட்டார். அதற்கு நண்பா முதலில் என்னை தூங்க விடு என்று சொன்னேன்” என சிரித்துக் கொண்டே சொன்னார்.



