இனிமேல் டிக்கெட் வேணும்ன்னா போன் பண்ணுவேன்.. ரோஹித்துக்கு ஜாம்பவான் டிராவிட் சொன்ன கலக்கல் வாழ்த்து

Rahul Dravid
- Advertisement -

இந்தியாவின் மும்பை நகரில் இருக்கும் வான்கடே கிரிக்கெட் மைதானத்தின் ஒரு ஸ்டேண்ட்க்கு ரோஹித் சர்மா பெயர் சூட்டப்பட்டது. மகாராஷ்டிராவை சேர்ந்த ரோஹித் சர்மா மும்பை அணிக்காக உள்ளூரில் விளையாடி இன்று இந்தியாவின் கேப்டனாகி 2 அடுத்தடுத்த ஐசிசி கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ள அவர் 2019 உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்தவர்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளார். அப்படி தங்கள் ஊரிலிருந்து சென்று நாட்டுக்காக பெருமை சேர்த்த ரோகித்துக்கு மும்பை வாரியம் வான்கடே மைதானத்தில் அந்த கௌரவத்தை கொடுத்துள்ளது. அந்த ஸ்டேண்ட்டை மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் ரோகித் சர்மாவின் பெற்றோர்கள் கோலாகலமாக திறந்து வைத்தனர்.

- Advertisement -

ரோஹித் ஸ்டேண்ட்:

இந்நிலையில் வான்கடே மைதானத்தில் ஒரு பகுதிக்கு பெயரை பெற்றுள்ள ரோஹித் சர்மாவுக்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக அந்த ஸ்டேண்ட்டில் நிறைய சிக்ஸர் அடியுங்கள் என்று ரோகித்தை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதை விட மும்பையில் நடைபெறும் முக்கியமான போட்டிகளின் போது தமக்கே டிக்கெட் கிடைக்காது என்று டிராவிட் கூறியுள்ளார்.

அப்போது ரோஹித் சர்மா ஸ்டேண்ட் பகுதியில் தமக்கு டிக்கெட் கிடைப்பதற்காக உங்களை அழைப்பேன் என்றும் டிராவிட் ஜாலியாக கலக்கலான வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள வீடியோவில் டிராவிட் பேசியது பின்வருமாறு. “ஹேய் ரோஹித். உங்களுடைய பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியில் நீங்கள் நிறைய சிக்ஸர்கள் அடிக்க வேண்டும்”

- Advertisement -

டிராவிட் கலக்கல் வாழ்த்து:

“உங்களுக்கு வாழ்த்துக்கள். இளம் வயதில் உலகிலேயே மிகவும் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்ற நீங்கள் அதை செய்துள்ளீர்கள் என்று நம்புகிறேன். அந்த மைதானத்தில் உங்களுக்கு பெயர் கிடைக்கும் என்று நீங்கள் கனவு கண்டிருக்க மாட்டீர்கள். அது நடந்துள்ளது”

இதையும் படிங்க: எஞ்சியுள்ள ஐ.பி.எல் தொடருக்கு அவங்க 2 பேரும் வரமாட்டாங்க.. தெளிவான தகவலை கூறிய – காசி விஸ்வநாதன்

“இது மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் பங்காற்றியதற்காக கிடைத்த நல்ல வெகுமதி. இதற்கு தகுதியான உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்களுடைய நண்பர்களுக்கும் அது சிறந்த நாளாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த மைதானத்தில் விளையாடும் போட்டிகளில் ரோஹித் சர்மா ஸ்டேண்ட் பகுதியில் நீங்கள் நிறைய சிக்சர்கள் அடிப்பதைப் பார்க்க உள்ளேன்.உங்களுடைய பெயரில் ஸ்டேண்ட் இருக்கிறது. எனவே மும்பையில் எனக்கு டிக்கெட் குறைவாக இருக்கும் போது யாரை அழைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினார்.

Advertisement