கோலி, தோனி இருவரில் கேப்டன் பொறுப்பில் யார் திறமையானவர்கள்..! – இஷாந்த் சர்மா கருத்து

sharma

இந்திய கிரிக்கெட் அணியில் தோனி மற்றும் கோலி ஒரு ஒப்பற்ற கேப்டன்களாக விளங்கி வருகின்றனர். தோனிக்கு பிறகு இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார் கோலி. சமீபத்தில் இவர்களது இருவரின் கேப்டன் திறன் குறித்து இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வேக பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மா, இந்திய அணியில் தோனி மற்றும் கோலி ஆகியோரின் இருவர் தலைமையிலும் விளையாடியுள்ளார். சமீபத்தில் நொய்டாவில் உள்ள பல்கலை கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இஷாந்த் ஷர்மா கிரிக்கெட்டில் அவர் பெற்ற ஞானம் குறித்தும் கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற அனுபவம் குறித்தும் இஷாந்த் ஷர்மா மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் இஷாந்த் ஷர்மாவை ஒரு சில கேள்விகளையும் கேட்டனர். அதில் ஒரு மாணவர் ‘இந்திய கிரிக்கெட் அணியில் தோனி மற்றும் கோலி ஆகிய இவர்களின் கேப்டன் திறமையில் இருக்கும் வித்யாசம் என்ன ? ‘ என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த இஷாந்த் ஷர்மா “தோனி எப்போதும் பொறுமையாக இருப்பார், கோலி எப்போதும் ஆக்ரோஷமாக இருப்பார் . இது தான் வித்யாசம்” என்று எளிமையாக பதில் அளித்துள்ளர்.

அதன் பின்னர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய இஷாந்த் ஷர்மா “பள்ளி கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களில் பிட்னெஸ் கூடம் இருப்பது மிகவும் அவசியம். நான் கல்லூரி படித்த காலத்தில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் எங்கள் காலேஜ்க்கு வந்தது இல்லை. ஆனால், உங்களுக்கு கிரிக்கெட்டில் சாதிக்க பல வாய்க்குகள் உள்ளது. உங்களால் சர்வதேச அளவில் இடம்பிடிக்க முடியவில்லை என்றாலும் ஐபிஎல் அளவிற்காவது சாதியுங்கள்” என்று கூறியுள்ளார்.