ரொம்ப தேங்க்ஸ் சார்.. காட்டடி மன்னன் ரசலை குப்புற விழவைத்த இஷாந்த் சர்மா.. ரசிகர்கள் நன்றி

Ishant Sharma vs Rusell
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் மூன்றாம் தேதி நடைபெற்ற 16வது லீக் போட்டியில் டெல்லியை 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 272/7 ரன்கள் குவித்து தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் அடித்து சாதனை படைத்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 85, ரசல் 41, ரிங்கு சிங் 26 ரன்கள் அடித்தனர்.

டெல்லி சார்பில் அதிகபட்சமாக இசாந்த் சர்மா 2, அன்றிச் நோர்ட்ஜே 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி டேவிட் வார்னர், பிரத்வி ஷா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் கேப்டன் ரிசப் பண்ட் 55, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 53 ரன்கள் எடுத்துப் போராடியும் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டான டெல்லி பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

மாஸ் பந்து:
கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 3 போட்டிகளில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. முன்னதாக இந்த போட்டியில் சுனில் நரேன், ரகுவன்ஷி ஆகியோர் அதிரடியாக ரன்கள் குவித்த பின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரசல் களமிறங்கினார். அந்த வாய்ப்பில் ஆரம்பம் முதலே டெல்லி பவுலர்களை சூறையாடிய அவர் 4 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு 41 (19) ரன்கள் விளாசினார்.

அவருடன் கடைசி நேரத்தில் கை கொடுத்த ரிங்கு சிங் தனது பங்கிற்கு 1 பவுண்டரி 3 சிக்சருடன் 26 (8) ரன்கள் விளாசி அவுட்டானார். அதனால் 19 ஓவரில் 264/5 ரன்கள் எடுத்த கொல்கத்தா சமீபத்தில் மும்பைக்கு எதிராக 277 ரன்கள் குவித்த ஹைதெராபாத்தின் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் சாதனையை உடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அனுபவ இந்திய வீரர் இஷாந்த் சர்மா 20வது ஓவரின் முதல் பந்திலேயே துல்லியமான யார்க்கரை வீசி ரசலை கிளீன் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

மறுபுறம் அதை கொஞ்சமும் எதிர்பாராத ரசல் தம்மையே பேலன்ஸ் செய்ய முடியாமல் கீழே விழுந்தார். அப்படி காட்டடி மன்னனான ரசலை குப்புற விழ வைத்து மண்ணை கவ்வ வைத்த இஷாந்த் சர்மாவை பார்த்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த ரமன்தீப் சிங்கை 2 ரன்களில் காலி செய்தார். அப்போதும் கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் ஹைதராபாத் சாதனையை சமன் செய்யலாம் என்ற வாய்ப்பு கொல்கத்தாவுக்கு இருந்தது. ஆனால் கடைசி பந்தையும் துல்லியமாக வீசிய இஷாந்த் சர்மா 1 ரன் மட்டுமே கொடுத்தார்.

இதையும் படிங்க: 106 ரன்ஸ்.. போராடிய ரிஷப் பண்ட்.. டெல்லியை வீழ்த்திய கொல்கத்தா.. 16 வருடங்களில் செய்யாத ஹாட்ரிக் சாதனை

அதனால் நூலிலையில் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் அடித்த அணி என்ற வரலாற்று சாதனையை கொல்கத்தாவை தவற விட்டது. அதன் காரணமாக “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று இஷாந்த் சர்மாவுக்கு ஹைதராபாத் சிகர்கள் சமூக வலைதளங்களில் நன்றி தெரிவிக்கின்றனர். அத்துடன் இப்போட்டியில் தோற்றாலும் அதிக ரன்கள் வாரி வழங்கிய அணி என்ற மோசமான சாதனை படைப்பதிலிருந்து டெல்லியையும் இஷாந்த் சர்மா காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement