கழற்றிவிட முடிவு செய்த இந்திய நிர்வாகம்! மனமுடைந்து ரஞ்சி கோப்பைக்கு குட் பை சொன்ன 2 சீனியர் வீரர்கள்

IND
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் துவங்க உள்ளது. முன்னதாக கடந்த வருடம் ரத்து செய்யப்பட்ட இந்த தொடர் இந்த வருடம் ஜனவரி மாதம் துவங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த வருடம் போலவே மீண்டும் இந்த தொடரை பிசிசிஐ காலவரையின்றி தள்ளிவைத்தது.

- Advertisement -

ஆனால் கோடிகளை வருமானமாக ஈட்டி தரும் ஐபிஎல் தொடரை மட்டும் நடத்த தேவையான செயல்களில் மும்முரமாக ஈடுபட்டு வந்த பிசிசிஐ ரஞ்சிக் கோப்பையை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தது. அதனால் கடுப்பான பல முன்னாள் வீரர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை கடுமையாக விமர்சனம் செய்ததை அடுத்து வேறு வழியின்றி இந்த தொடரை பிசிசிஐ மீண்டும் நடத்துகிறது.

ரஞ்சி கோப்பை:
இதை அடுத்து இந்த வருடத்தின் ரஞ்சிக் கோப்பையை 2 பாகங்களாக நடத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. அதன்படி 10ஆம் தேதி துவங்க உள்ள இந்த தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள் முதல் பாகமாக நடைபெற உள்ளது. நாக்அவுட் சுற்று போட்டிகள் அடங்கிய 2வது பாகம் வரும் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பல ஆயிரம் உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

Pujara

ரஞ்சி கோப்பை மீண்டும் நடைபெற உள்ளதால் இந்திய சீனியர் கிரிக்கெட்டில் மோசமாக செயல்பட்டு வரும் வீரர்கள் இந்த கோப்பையில் விளையாடி மீண்டும் இந்திய அணியில் வெற்றிகரமாக காலடி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த 2 வருடங்களாக ஒரு சதம் அடிக்க முடியாமல் படுமோசமான பார்மல் திண்டாடி வரும் அனுபவ நட்சத்திர வீரர்கள் புஜாரா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் இந்த ரஞ்சி கோப்பையில் விளையாட உள்ளார்கள். இந்த தொடரில் அதிகமாக ரன்களை குவித்தால் இந்திய அணியில் மீண்டும் விளையாட உறுதியான வாய்ப்பு கிடைக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கழட்டிவிடபடும் மூத்த வீரர்கள்:
ஆனால் தற்போது இந்திய அணிக்கு புதிய தேர்வுக் குழுவினர், புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், புதிய கேப்டன் ரோகித் சர்மா என தலைமை பொறுப்பு முற்றிலுமாக மாறிவிட்டது. எனவே தலைமைப் பொறுப்பில் புதியவர்கள் வந்துள்ளதால் அவர்கள் தங்கள் ருசி மற்றும் ஸ்டைலுக்கு ஏற்றவாறு இந்திய அணியை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

Ishanth

குறிப்பாக டெஸ்ட் அணியில் நீண்ட காலமாக விளையாடி வரும் அனுபவ வீரர்கள் புஜாரா, அஜிங்கிய ரஹானே, விருத்திமான் சஹா, இஷாந்த் சர்மா ஆகியோர் காலம் கடந்து விட்டதாக புதிய இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது. அதற்கேற்றார்போல் சமீப காலங்களாக கொடுக்கப்பட்ட வாய்ப்பில் அவர்களும் சிறப்பாக செயல்படவில்லை. இதன் காரணமாக புஜாரா, ரகானே ஆகியோர் இந்த வருடம் ரஞ்சி கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டாலும் கூட இனி இந்திய அணியில் உறுதியான வாய்ப்பு என்பது சந்தேகம் என தெரியவந்துள்ளது. ஏனெனில் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து புதிய இந்திய அணியை உருவாக்க இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது.

- Advertisement -

குட் பை சொன்ன 2 சீனியர்கள்:
அவர்களை போலவே இந்திய டெஸ்ட் அணியில் சீனியர் வீரர்களாக வலம் வரும் ரித்திமான் சகா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோருக்கு ஏற்கனவே இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது அரிதாக மாறிவிட்டது. குறிப்பாக விக்கெட் கீப்பர் பொறுப்பில் இளம் வீரர் ரிஷப் பண்ட் வந்துவிட்டதால் சகாவுக்கு சமீப காலங்களாக வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் அவர் ரிஷப் பண்ட் அளவுக்கு ரன்கள் குவிக்க தடுமாறுகிறார்.

saha

மேலும் ரிஷப் பண்ட் காயம் அடைந்தால் கூட அவருக்கு பதில் மற்றொரு விக்கெட் கீப்பராக விளங்கும் கேஎஸ் பரத்துக்கு வாய்ப்பளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துவிட்டதாகவும் இதுபற்றி சகாவுக்கு தகவல் தெரிவித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ரஞ்சி கோப்பையில் ரித்திமான் சஃகா பங்கேற்கமாட்டார் என தெரியவந்துள்ளது.

- Advertisement -

அதேபோல் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் 100 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட இஷாந்த சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமீப காலங்களாக எதிரணியை அச்சுறுத்தும் வகையில் பந்து வீச அவர் தடுமாறுவதாலும் முகமது சிராஜ் போன்ற இளம் வீரர்களின் வருகையாலும் அவருக்கு இனி இந்திய அணியில் உறுதியான வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என தெரியவந்துள்ளது. ஒருவேளை முகமது சிராஜ் காயம் அடைந்தால் கூட இஷாந்த் சர்மாவுக்கு பதில் அவேஷ் கான், பிரசித் கிருஷ்னா, நவ்தீப் சைனி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து வளர்க்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துவிட்டது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : இந்த சீசனுக்கான சன் ரைசர்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி இதோ – எப்படி இருக்கு சொல்லுங்க?

இந்த தகவலும் இஷாந்த் ஷர்மாவின் காதுகளுக்கு சென்றடைந்ததால் ரஞ்சி கோப்பையில் பங்கேற்பதற்கான டெல்லி அணியின் வலைப்பயிற்சியில் அவர் பங்கேற்கவில்லை. எனவே ரஞ்சி கோப்பைக்கான டெல்லி அணியில் அவரின் பெயரை தேர்வு குழுவினர் சேர்க்கவில்லை. மொத்தத்தில் “இந்திய அணியில் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதால் ரஞ்சி கோப்பையில் விளையாடி இனி என்ன செய்யப் போகிறோம்” என்ற எண்ணத்தில் மனமுடைந்துள்ள இசாந்த் சர்மா மற்றும் ரித்திமான் சஹா ஆகியோர் ரஞ்சி கோப்பைக்கு குட் பை கூறியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Advertisement