நான் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாட டிராவிட் சார் தான் காரணம் – மனம் திறந்த மும்பை வீரர்

13வது ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலர் அனைவரும் வியக்க வைக்கும் அளவில் விளையாடினார்கள். பெங்களூரு அணியின் தேவ்தத் படிக்கல், ஐதராபாத் அணியின் தங்கராசு நடராஜன், மும்பை அணியின் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான் போன்ற வீரர்கள் பெயர் சொல்லும் அளவிற்கு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வருடம் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

mi

இந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருந்தவர் இளம் வீரர் இஷான் கிஷான். இவருக்கு தற்போது 21 வயதுதான் ஆகிறது. இந்த வருடம் அவருக்கு மிகச் சிறப்பான வருடமாக அமைந்தது. பெங்களூரு அணிக்கு எதிராக குறிப்பாக 99 ரன்கள் அடித்து ரோஹித் சர்மா இல்லாத குறையை தீர்த்து வைத்து அதிரடியை நிகழ்த்தினார்.இவர் இடது கை வீரராக இருப்பதால் மும்பை அணிக்கு இது ஒரு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது .

டெல்லி அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய அவர் 47 பந்துகளில் 72 ரன்கள் குவித்து குவித்து அணியை தனி ஆளாக நின்று வெற்றி பெற வைத்தார். மும்பை அணிக்காக இந்த சீசனில் மட்டும் 11 போட்டிகளில் ஆடி 595 ரன்கள் குவித்தார். சென்ற வருடம் எல்லாம் இந்த அளவிற்கு அவர் ஆடியதில்லை. ஆனால் இந்த வருடம் மிகச் சிறப்பாக விளையாடினார். தனது இந்த ஆட்டம் மேம்பட்டு இருப்பதற்கு காரணம் ராகுல் டிராவிட் தான் என்று கூறியிருக்கிறார்.

Ishan kishan

இதுகுறித்து அவர் கூறுகையில்… நான் அதிகமாக லெக் திசையில் தான் அடித்து விளையாடிக் கொண்டிருந்தேன். எனது பல பயிற்சியாளர்கள், ஆஃப் திசையில் அடிப்பது மிகவும் வேண்டிய விஷயம் என்று கூறினர். அது எனக்கு பலமும் கிடையாது. இதனால் அதனை நான் பெரிதாக முயற்சிக்கவில்லை.

- Advertisement -

ishan kishan

ராகுல் டிராவிட் தான் என்னை அதனை செய்யும் படி அறிவுறுத்தினார். மேலும் எவ்வாறு விளையாடுவது என்ற ஆலோசனைகளையும், பயிற்சிக்கான அறிவுரைகளையம் வழங்கினார். அதன் பின்னர் அதனை பழகினேன். இதன் தாக்கம் தான் இந்த வருட ஐபிஎல் தொடரில் தெரிந்தது இதற்கு காரணம் ராகுல் டிராவிட் தான் என்று தெரிவித்து இருக்கிறார் இஷான் கிஷான்.