இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
நியூசிலாந்து அணிக்கெதிரான அதிரடி ஆட்டம் குறித்து : இஷான் கிஷன் பேச்சு
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 15.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 209 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 82 ரன்களையும், இஷான் கிஷன் 76 ரன்களையும் குவித்தனர். குறிப்பாக 32 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 76 ரன்களை குவித்ததன் காரணமாக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது இந்த அதிரடியான ஆட்டத்திற்கு பிறகு தனது கம்பேக் குறித்து பேசியிருந்த இஷான் கிஷன் கூறுகையில் :
நான் இந்திய அணியில் இருந்து வெளியேறிய பிறகு மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாட முடியுமா? என்ற கேள்வி எனக்குள் இருந்து வந்தது. ஆனாலும் என் மனது ஒரு விடயத்தை சொல்லிக் கொண்டே இருந்தது. அதாவது என்னால் நிச்சயம் மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியை அணிய முடியும் என்றும் தொடர்ந்து பேட்டிங் செய்தால் நல்ல ரன் குவிப்பை வழங்க முடியும் என்று உழைத்தேன்.
இதையும் படிங்க : ஜெயிச்சது எல்லாம் சரிதான்.. ஆனா சஞ்சு சாம்சனின் இந்த விடயம் தான் சரியில்ல – ஆகாஷ் சோப்ரா கருத்து
தொடர்ந்து சிறப்பாக விளையாடி என்னை நான் நிரூபித்தால் நிச்சயம் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். அந்த வகையிலேயே உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தேன். தற்போது இந்திய அணியிலும் மீண்டும் கம்பேக் கொடுத்து விளையாடி வருகிறேன் என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.



