சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது 2 போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்கிற கணக்கில் பலமான நிலையில் முன்னிலை வகிக்கிறது.
சஞ்சு சாம்சனின் இடம் குறித்து பேசிய : ஆகாஷ் சோப்ரா
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன. இந்த தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் நிலையில் இருக்கும் வேளையில் இந்திய அணியின் ஆட்டம் திருப்திகரமாக இருந்தாலும் சஞ்சு சாம்சனின் ஆட்டம் வருத்தம் அளிப்பதாக ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளிலுமே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த தொடரில் ஒரே ஒரு கவலை அளிக்கும் விடயமாக சஞ்சு சாம்சனின் பேட்டிங் ஃபார்ம் அமைந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே நாக்பூர் நகரில் நடைபெற்ற போட்டியில் மோசமாக விளையாடி ஆட்டமிழந்த சஞ்சு சாம்சன் ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தார்.
இவர் இப்படியே விளையாடினால் இந்த தொடரின் ஐந்தாவது போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறும் போது அங்கு அவர் விளையாடுவாரா? என்பது சந்தேகமாகும். சொந்த மாநிலத்தில் உள்ள ரசிகர்கள் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவளித்தாலும் அவரது மோசமான பேட்டிங் பார்ம் அவரது இடத்திற்கு கேள்வியை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க : 300 ரன் அடிச்சா கூட பத்தாது.. இந்திய அணிக்கெதிரான தோல்வி குறித்து பேசிய – மிட்சல் சான்ட்னர்
அதேவேளையில் அபிஷேக் சர்மா இருந்தால் மட்டுமே இந்திய அணி 200 ரன்களை அடிக்கும் மற்றபடி பெரிய ரன்களை அடிக்காது என்று சில கருத்துக்கள் இருந்து வந்த வேளையில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தும் இந்திய அணி 200-க்கும் மேற்பட்ட இலக்கினை 16 ஓவர்களில் விரட்டியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஆகாஷ் சோப்ரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



