MI vs RR : இந்த ஓவரில் தான் நாங்கள் தோல்வி அடையப்போகிறோம் என்பது உறுதியானது – இஷான் கிஷன்

ஐ.பி.எல் தொடரின் 27 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ரஹானே தலைமை

Ishan
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 27 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

Rahane 1

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக டி காக் 52 பந்துகளில் 81 ரன்களை குவித்தார். ரோஹித் 47 ரன்களை அடித்தார். பிறகு 118 ரன்கள் இலக்காக ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

அதன்படி தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது. இதனால் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். இதில் 7 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். ஆட்டநாயகனாக பட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Buttler 1

போட்டி முடிந்து பேட்டி அளித்த மும்பை அணி வீரர் இஷான் கிஷன் கூறுகையில் : 12 ஓவர் முடிவில் வரை ஆட்டம் எங்களிடமே இருந்தது. 48 பந்துகளில் 70 ரன்களை குவிக்க வேண்டும். ஆனால், அல்சாரி வீசிய 13 ஆவது ஓவரில் இரண்டு சிக்ஸ் மற்றும் நான்கு பவுண்டரிகள் என ஒரே ஓவரில் 28 ரன்களை ஜாஸ் பட்லர் குவித்தார். பிறகு அடுத்த ஓவர் 42 பந்துகளில் 42 ரன்கள் தேவை என்று இலக்கு எளிதானது.

Buttler 2

பட்லரின் அந்த ஒரு ஓவர் அதிரடி ஆட்டத்தின் போக்கை முற்றிலும் திருப்பியது என்று நான் கருதுகிறேன். இருப்பினும், கடைசி வரை மும்பை அணி வெற்றிக்காக சிறப்பாக போராடியது. எங்களது பந்துவீச்சாளர்கள் கடைசி நேரத்தில் சிறப்பாக வீச ராஜஸ்தான் அணி சற்று கடினப்பட்டே வெற்றியை அடைந்தது. அடுத்த போட்டியில் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவோம் என்று இஷான் கிஷன் கூறினார்.

Advertisement