IND vs BAN : வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இஷான் கிசான் – கெயில், சச்சின், சேவாக், ரோஹித்தை மிஞ்சி புதிய உலக சாதனை

IShan Kishan
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த இந்தியா கோப்பை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அந்த நிலையில் டிசம்பர் 10ஆம் தேதியன்று சட்டக்ரோம் மைதானத்தில் நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து காயமடைந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதில் இளம் வீரர் இஷான் கிசான் ஷிகர் தவானுடன் களமிறங்கினார். அதில் ஷிகர் தவான் வழக்கம் போல ஆரம்பத்திலேயே தடவி 3 (8) ரன்களில் அவுட்டானாலும் நீண்ட நாட்கள் கழித்து வாய்ப்பு பெற்ற இசான் கிசான் அதிரடி சரவெடியான பேட்டிங்கை துவங்கினார்.

குறிப்பாக முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளால் சந்தித்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு வங்கதேச பவுலர்களை புரட்டி எடுக்க துவங்கிய அவர் விராட் கோலியுடன் அதிரடியாக ரன்களை சேர்த்தார். பவர் பிளே கடந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் ஒருபுறம் விராட் கோலி கம்பெனி கொடுக்கும் வகையில் அரை சதம் கடக்க மறுபுறம் தெறிக்க விடும் பேட்டிங் செய்த இஷான் கிசான் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ரன்களை குவித்து சதமடித்து மிரட்டினார். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை விளாசிய அவர் அதை வெறித்தனமாக கொண்டாடியதுடன் மேற்கொண்டு ஓயாமல் வங்கதேச பவுலர்களை அடித்து நொறுக்கினார்.

- Advertisement -

அதனால் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்த இந்த ஜோடியில் தொடர்ந்து வெளுத்து வாங்கிய இசான் கிசான் 150 ரன்கள் கடந்து நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்தி 35 ஓவரிலேயே 126 பந்துகளில் 23 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்களைப் பறக்க விட்டு இரட்டை சதமடித்தார். அவரது சதத்தை எதிர்ப்புறம் இருந்த விராட் கோலியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு பின் இரட்டை சதமடித்த 4வது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை இஷான் கிசான் படைத்தார்.

கடைசி வரை 131 பந்துகளில் 24 பவுண்டரிகள் 10 சிக்ஸர்கள் உட்பட 210 ரன்களை 160.31 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் ஒரு வழியாக அவுட்டானார். அதிலும் 126 பந்துகளிலேயே இரட்டை சதமடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இரட்டை சதமடித்த பேட்ஸ்மேன் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கிறிஸ் கெயில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 138 பந்துகளில் இரட்டை சதம் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

இதையும் படிங்க: IND vs BAN : வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இஷான் கிசான் – கெயில், சச்சின், சேவாக், ரோஹித்தை மிஞ்சி புதிய உலக சாதனை

அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற வீரேந்திர சேவாக் (140 பந்துகள்) சாதனையும் உடைத்துள்ள அவர் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா ஆகியோரையும் மிஞ்சி அட்டகாசமான சாதனை படைத்துள்ளார். அவரது அதிரடியால் இந்தியா இப்போட்டியில் 400 ரன்களை தொடுவதற்கு பிரகாச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement