2021 போல ஐபிஎல் 2023 சீசனில் மாஸ் கம் பேக் கொடுப்போம் – இளம் சிஎஸ்கே வீரர் உறுதியான பேட்டி

Ruturaj
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு இந்தியாவிலேயே நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறுகிறது. அதில் தேவையான வீரர்களை வாங்கிக்கொண்டு கோப்பையை வெல்வதற்கு களமிறங்கும் 10 அணிகளுக்கு மத்தியில் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது அனைவரது எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் இந்தியாவைப் போலவே தனது அற்புதமான கேப்டன்ஷிப் வாயிலாக சென்னையை வெற்றிகரமான அணியாக மாற்றிய கேப்டன் எம்எஸ் தோனி 39 வயதை கடந்து விட்டதால் அடுத்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

மேலும் இதர அணிகளை போல் அல்லாமல் வரலாற்றில் எப்போதுமே தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் அணியாக கருதப்படும் சென்னை கடந்த 2020க்குப்பின் 2வது முறையாக இந்த வருடம் சுமாராக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் அவமானத்தை சந்தித்தது. ஆனால் 2020 சீசனில் முதல் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாத அந்த அணி அடுத்த வருடமே அபாரமாக செயல்பட்டு 4வது கோப்பையை வென்று அற்புதமான கம்பேக் கொடுத்தது.

கம்பேக் கொடுப்போம்:

அதே போல் இந்த வருடம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத அந்த அணி அடுத்த வருடம் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்லும் என்பதே சென்னை ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் 2022 சீசனில் செய்த தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டு அடுத்த வருடம் சென்னை சிறப்பான கம்பேக் கொடுக்கும் என்று அதன் நட்சத்திர இளம் கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கைக்வாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2021 சீசனில் 635 ரன்களை விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்று 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் இந்த வருடம் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Ruturaj gaikwad.jpeg

இருப்பினும் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் நாக் சுற்றில் ஹாட்ரிக் சதங்கள் அடித்தது, ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை பறக்க விட்டது உட்பட 660 ரன்களை விளாசி அற்புதமான ஃபார்மில் இருக்கும் அவர் 2023 சீசனில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல உதவுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவுக்காக 50 ஓவர் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் மீண்டும் சிறப்பாக செயல்படுவதே தன்னுடைய முதன்மை லட்சியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஐபிஎல் 2023 தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது. குறிப்பாக ஏலம் நடைபெற்று முடிந்ததும் சென்னை அணியின் பயிற்சி முகாம்கள் நடைபெறும் என்று நினைக்கிறேன். 2022 சீசனில் முக்கிய வீரர்கள் காயமடைந்ததால் எங்களது அணி மோசமான தோல்விகளை சந்தித்தது. மேலும் டி20 போட்டிகளில் வெற்றி என்பது அன்றைய நாளில் வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்து அமையும். அந்த வகையில் இந்த சீசனில் நிச்சயம் நாங்கள் கம்பேக் கொடுப்போம்”

Ruturaj

“டி20 கிரிக்கெட்டில் நான் நிறைய ரன்கள் அடித்திருந்தாலும் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். ஏனெனில் அதில் நாட்டுக்காக சிறப்பாக செயல்பட்டால் தான் உங்களது கேரியர் முழுமையடையும். எப்போதும் நான் கவனத்துடன் விளையாட விரும்புகிறேன். அழுத்தமான பெரிய போட்டிகளில் பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாகும். அதற்காக என்ன செய்யலாம் என்று நினைத்து எனது அணியை வெற்றி பெற வைப்பதற்கான பயிற்சிகளையும் வேலைகளையும் செய்து வருகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அவங்க 2 பேரையும் எதுக்கு டீம்ல எடுத்தீங்க? இப்படி அசிங்கப்படுத்ததானா? – ரசிகர்கள் கொதிப்பு

முன்னதாக மகாராஷ்டிரா அணியை கேப்டனாக செயல்பட்டு விஜய் ஹசாரே கோப்பையின் பைனல் வரை அழைத்துச் சென்ற அவர் கேப்டன்ஷிப் அனுபவம் கொண்டவராகவும் இளம் வீரராகவும் இருப்பதால் தோனிக்கு பின் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று அந்த அணி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement