IND vs WI : வெ.இ ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கு பதில் அவர் தான் விளையாடனும் – டிகே கூறும் காரணம் என்ன?

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 1 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. இதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா களமிறங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 27ஆம் தேதி பார்படாஸ் துவங்குகிறது.

Sanju-Samson

- Advertisement -

அதில் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு தேவையான வீரர்களுக்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரிஷப் பண்ட் காயமடைந்துள்ள நிலையில் உலகக் கோப்பையில் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2வது பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் 2017இல் அறிமுகமாகி 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் போராடி கடந்த வருடம் கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டார்.

டிகே கருத்து:
ஆனாலும் மனசாட்சியின்றி கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கழற்றி விடப்பட்ட அவருக்கு பதில் கேஎல் ராகுல் விளையாடினார். இருப்பினும் தற்போது ராகுல் காயமடைந்துள்ளதால் குறைந்தபட்சம் இந்த தொடரிலாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் 2011 உலகக்கோப்பையில் கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகிய இடது கை வீரர்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது.

Shubman-Rohit-Ishan

ஆனால் தற்போதைய அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் என டாப் 5 – 6 பேட்ஸ்மேன்கள் அனைவருமே வலது கை வீரர்களாக இருக்கின்றனர். எனவே உலகக்கோப்பையில் 2வது பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை விட கடந்த டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்து அதிரடியாக விளையாடும் இடது கை பேட்ஸ்மேனாக இருக்கும் இசான் கிசான் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

- Advertisement -

அதற்கு முன்னோட்டமாக இந்த தொடரிலேயே இசான் கிசான் விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “2வது விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் இசான் கிசான் ஆகியோருடைய போட்டி நிலவுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சஞ்சு சாம்சனை விட இஷான் கிசான் சற்று முன்னுரிமையுடன் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன்”

DInesh Karthik Ishan Kishan

“ஏனெனில் இந்தியாவுக்கு தற்சமயத்தில் இடது கை வீரர்கள் தேவைப்படுகிறார்கள். அதன் காரணமாக இந்த தொடரிலேயே இஷான் கிசான் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். அத்துடன் அவர் ரிசர்வ் தொடக்க வீரராகவும் உலகக்கோப்பையில் விளையாடுவதற்கான திறமையைக் கொண்டுள்ளார்” என கூறினார். அதாவது இஷான் கிசான் தேர்வு செய்யப்பட்டால் இடது கை பேட்ஸ்மேன் பிரச்சினை மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பருக்கும் ஓப்பனிங் பேட்ஸ்மேனுக்கும் ரிசர்வ் வீரராக இருப்பார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஜாஹீர் கானின் கேரியரை முடிச்சதுக்காக விராட் கோலி மன்னிப்பு கேட்டாரு – 2014 பின்னணியை நேரலையில் பகிர்ந்த இஷாந்த் சர்மா

ஆனால் சஞ்சு சாம்சன் 3வது இடத்தில் விளையாடுபவராக இருப்பதால் விக்கெட் கீப்பருக்கு மட்டுமே பேக் அப் வீரராக இருக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். அதனால் சஞ்சுவை விட இசான் கிசான் இந்த தொடரிலிருந்து வாய்ப்பு பெற்று அசத்தினால் உலக கோப்பையில் இந்தியாவுக்கு பயனை ஏற்படுத்தும் வகையில் இருப்பார் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இருப்பினும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் எப்படி தான் அசத்துவார் என்று கருத்து தெரிவிக்கும் ரசிகர்கள் சஞ்சு சாம்சன் தான் விளையாட வேண்டுமென ஆதரவு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement