ஜாஹீர் கானின் கேரியரை முடிச்சதுக்காக விராட் கோலி மன்னிப்பு கேட்டாரு – 2014 பின்னணியை நேரலையில் பகிர்ந்த இஷாந்த் சர்மா

Ishant Sharma Zaheer Khan
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜஹீர் கான் இந்தியாவின் மகத்தான இடதுகை வேகப்பந்து வீச்சாளராக ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறார். கடந்த 1999இல் அறிமுகமாகி சௌரவ் கங்குலியால் வளர்க்கப்பட்ட அவர் 2004 முதல் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து 92 டெஸ்ட் மற்றும் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 592 விக்கெட்களை எடுத்து இந்தியாவுக்கு நிறை வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராக சாதனை படைத்து வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவரை போன்ற தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளர் கிடைக்காமல் இன்னும் இந்தியா தடுமாறி வருகிறது என்றே சொல்லலாம்.

மேலும் எத்தனை சாதனைகள் படைத்தாலும் அவரைப் போன்ற பவுலிங் ஆக்சனை காப்பி அடிக்கும் முயற்சிக்காத இந்திய ரசிகர்கள் இருக்க முடியாது என்பதே ஜஹீர் கான் தம்முடைய கேரியரில் செய்த மிகப்பெரிய சாதனை என்றால் மிகையாகாது. பொதுவாக ஒரு கேட்ச் பிடிக்காமல் விடுவது தென்னாப்பிரிக்காவின் உலக கோப்பையை பறிக்கும் அளவுக்கு எந்த வகையான போட்டியாக இருந்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை மிக்கது என்றே சொல்லலாம். ஆனால் கடந்த 2014 நியூசிலாந்து எதிராக நடைபெற்ற வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் ஜஹீர் கான் பந்து வீச்சில் ப்ரெண்டன் மெக்கல்லம் கொடுத்த கேட்ச்சை விராட் கோலி விட்டது அவருடைய கேரியரை முடிக்கும் வகையில் அமைந்தது.

- Advertisement -

விராட் கோலியின் மன்னிப்பு:
ஏனெனில் வெறும் 9 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்சை விராட் கோலி கோட்டை விட்டதை பயன்படுத்திய மெக்கல்லம் 302 ரன்கள் விளாசி சாதனைகள் படைத்து இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்நிலையில் அந்த போட்டியில் விராட் கோலி கேட்ச் விட்டதற்காக மன்னிப்பு கேட்ட போது “பரவாயில்லை விடு சீக்கிரம் அவுட்டாக்கி விடலாம்” என்று ஜஹீர் கான் பதிலளித்ததாக இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கடைசியில் முச்சதம் அடித்த போது மீண்டும் மன்னிப்பு கேட்ட விராட் கோலியிடம் “நீங்கள் என்னுடைய கேரியரையே முடித்து விட்டீர்கள் பரவாயில்லை விடுங்கள்” என்று ஜஹீர் கான் ஜூனியரை திட்ட முடியாமல் சொன்னதாக இஷாந்த் சர்மா கூறியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஜஹீர் கானுடன் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் இஷாந்த் சர்மா அந்த தருணத்தைப் பற்றி ஜியோ சினிமா சேனலில் நேரலையில் பகிர்ந்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாங்கள் நியூசிலாந்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். ப்ரெண்டன் மெக்கல்லம் 300 ரன்கள் அடித்த அந்த போட்டியில் ஆரம்பத்திலேயே விராட் கோலி கேட்ச் விட்ட போது உணவு இடைவெளியில் இவ்வாறு நடந்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அதாவது அந்த சமயத்தில் ஜாஹீரிடம் கேட்ச் விட்டதற்காக விராட் கோலி மன்னிப்பு கேட்டார். அதற்கு “கவலைப்படாதீர்கள் அவரை விரைவில் அவுட்டாக்கி விடுவோம்” என்று ஜாகிர் கான் சொன்னார். அதைத்தொடர்ந்து தேநீர் இடைவேளையிலும் மீண்டும் விராட் கோலி மன்னிப்பு கேட்ட போது கவலைப்படாதீர்கள் என்று ஜாகிர் கான் சொன்னார்”

“ஆனால் 3வது நாள் தேனீர் இடைவேளையில் மீண்டும் விராட் கோலி மன்னிப்பு கேட்ட போது அவரிடம் “நீங்கள் என்னுடைய கேரியரையே முடித்து விட்டீர்கள்” என்று ஜகீர் கான் தெரிவித்தார்” என கூறினார். இருப்பினும் அப்போது குறுக்கிட்ட ஜாகீர் கான் தாம் அவ்வாறு சொல்லவில்லை என்றும் அதை நினைத்துக் கொண்டிருந்தால் எதுவும் செய்ய முடியாது என்று தான் விராட் கோலியிடம் பதிலளித்ததாக தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:Ashes 2023 : அடுத்த ஆஷஸ் போட்டியுடன் வார்னர் – ஸ்மித் ரிட்டையராக போறாங்க தெரியுமா, மைக்கேல் வாகன் அதிரடி பேட்டி

“நான் அதை சொல்லவில்லை. மாறாக அப்படி 2 வீரர்கள் மட்டுமே இருந்தனர் என்று சொன்னேன். முதலில் கிரண் மோர் கேட்ச் விட்டத்தை பயன்படுத்தி கிரகாம் கூச் 300 ரன்கள் அடித்தார். அதே போல விராட் கோலி விட்டதை பயன்படுத்தி ஒருவர் 300 ரன்கள் அடித்தார். அதனால் நீங்கள் எதைப் பற்றியும் நினைக்காதீர்கள் என்று நான் சொன்னேன். ஏனெனில் இயற்கையாக அந்த கேட்ச் விடப்பட்டு ரன்களும் அடிக்கப்பட்டது” என்று கூறினார். இருப்பினும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு அதுவே இந்தியாவுக்காக விளையாடிய கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement