Ashes 2023 : அடுத்த ஆஷஸ் போட்டியுடன் வார்னர் – ஸ்மித் ரிட்டையராக போறாங்க தெரியுமா, மைக்கேல் வாகன் அதிரடி பேட்டி

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் தோற்று தலை குனிந்த இங்கிலாந்து அதற்காக சந்தித்த விமர்சனங்களுக்கு 3வது போட்டியில் வென்று தக்க பதிலடி கொடுத்தது. இருப்பினும் மான்செஸ்டரில் நடைபெற்ற முக்கியமான 4வது போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து 4வது நாள் முடிவில் வெற்றி பெறும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்ட போதிலும் கடைசி நாளில் மழை வந்து தடுத்ததால் ட்ராவில் முடிந்தது.

- Advertisement -

அதனால் தப்பிய ஆஸ்திரேலிய நடப்பு சாம்பியனாக இருப்பதால் ஆஷஸ் கோப்பையை வென்றது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மறுபுறம் 2001க்குப்பின் சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் தோல்வியை சந்தித்து வராமல் இருந்து வரும் இங்கிலாந்து அந்த கௌரவத்தை தக்க வைத்துக்கொள்ள கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தொடரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னர் தடுமாற்றமாக செயல்படுவதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளார்.

வாகன் அதிரடி:
ஆரம்ப காலங்களில் அதிரடியாக விளையாடி நட்சத்திரமாக உருவெடுத்த அவர் வயது காரணமாக சமீப காலங்களில் தடுமாறும் நிலையில் இந்த தொடரில் ஸ்டுவர்ட் ப்ராடுக்கு எதிராக பெட்டி பாம்பாக அடங்கி வருகிறார். அதனால் வரும் 2024 ஜனவரியில் சொந்த மண்ணில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் ஓவல் மைதானத்தில் வரும் ஜூலை 27ஆம் தேதி துவங்கும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியுடன் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஓய்வு பெறப்போவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார்.

warner

குறிப்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் மான்செஸ்டரில் மழை பெய்த போது காற்று வாக்கில் தமது காதுக்கு இந்த செய்தி வந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “பொதுவாக மழை பெய்யும் போது அனைவருக்கும் அலுப்பு தட்டுவது வழக்கமாகும். அப்போது நீங்கள் சில கிசுகிசுக்களை பேசுவதும் சாதாரணமாகும். ஆனால் அந்த கிசுகிசுக்களை அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும் ஓவல் மைதானத்தில் வார்னர் விளையாடினால் அதுவே அவருடைய கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும்”

- Advertisement -

“இந்த செய்தியை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்பது எனக்கு தெரியாது என்பதை மீண்டும் சொல்லி கொள்கிறேன். அதே போலவே ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்காக ஸ்டீவ் ஸ்மித் கடைசியாக விளையாடப் போகிறார் என்ற வலுவான செய்தியும் எனக்கு கிடைத்துள்ளது. இருப்பினும் இவை அனைத்தும் வெறும் கிசுகிசுக்கள் ஆகும். இது பற்றி மான்செஸ்டரில் மழை பெய்த போது நிறைய மக்கள் பேசியதை நான் பார்த்தேன்”

Vaughan

“ஆனால் அதை நம்ப முடியாது என்றாலும் நேற்று செய்தியாளர்கள் அறையில் சில ஆஸ்திரேலிய ஜாம்பவான்களே இதைப் பற்றி பேசியது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே ஓவல் மைதானத்தில் சில மகத்தான வீரர்கள் ஓய்வு பெறலாம்” என்று கூறினார். முன்னதாக இதே தொடரில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி முடிவெட்டி விட்டு காசு கொடுக்கவில்லை என்று இங்கிலாந்தின் பிரபல சன் பத்திரிகை போலியாக செய்தி வெளியிட்டது. அதே வரிசையில் மைக்கேல் வாகனும் இப்படி காற்று வாக்கில் வந்தது என பேசியுள்ளார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:IND vs WI : ஒருநாள் கிரிக்கெட்டில் பிரமாண்டமான சாதனையை படைக்க காத்திருக்கும் – ரோஹித் சர்மா (அடிப்பாரா?)

ஏனெனில் டேவிட் வார்னர் கூட தடுமாறும் நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தற்போது கேன் வில்லியம்சன், விராட் கோலி போன்றவர்களை மிஞ்சம் அளவுக்கு தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார். எனவே அவர் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலைமையில் இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement