5 ஃபோர்ஸ் 10 சிக்ஸ்.. 86 பந்தில் சதம்.. தமிழக மண்ணில் கம்பேக் கொடுத்த இஷான் கிசான்.. பிசிசிஐக்கு மெசேஜ்

Ishan Kishan 2
- Advertisement -

தமிழ்நாட்டில் புஜ்ஜி பாபு 2024 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆகஸ்ட் 15ஆம் தேதி திருநெல்வேலியில் இருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் கம்பெனி மைதானத்தில் ஜார்க்கண்ட் மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதிய போட்டி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மத்திய பிரதேச முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 225 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுபம் சிங் 84, அர்ஹாம் அகுய்ல் 57 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி 2வது நாள் முடிவில் 277/7 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. அதனால் மத்திய பிரதேசத்தை விட ஜார்க்கண்ட் 51 ரன்கள் முன்னிலையும் பெற்றுள்ளது.

- Advertisement -

அசத்தல் கம்பேக்:
குறிப்பாக ஜார்காண்ட் 108/3 என தடுமாறிய களமிறங்கிய கேப்டன் இசான் கிசான் மிகவும் நிதானமாக விளையாடி 61 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஆனால் அங்கிருந்து அதிரடியாக விளையாடத் துவங்கிய அவர் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்க விட்டு 86 பந்துகளில் சதமடித்தார். அதிலும் குறிப்பாக 92 ரன்களில் இருந்த போது அடுத்தடுத்த சிக்ஸர்களுடன் அவர் சதத்தை தொட்டு தம்முடைய தரத்தை நிரூபித்தார்.

அந்த வகையில் மொத்தமாக 5 பவுண்டரி 10 சிக்சர்களை அடித்த இஷான் கிசான் 107 (114) ரன்கள் குவித்து அவுட்டானார். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் தேர்வாகியிருந்த அவர் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டதாக சொல்லி வெளியேறினார். அதன் பின் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவரை தேர்ந்தெடுக்க ரஞ்சிக்கோப்பையில் விளையாடி தயாராக இருக்குமாறு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

இருப்பினும் அதைக் கேட்காத இசான் கிசான் ஐபிஎல் தொடரில் விளையாட தயாரானார். அதனால் கோபமடைந்த பிசிசிஐ இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து அவரை அதிரடியாக நீக்கியது. மேலும் 2024 ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்ட அவரை சமீபத்திய ஜிம்பாப்வே மற்றும் இலங்கை தொடர்களில் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் தேர்ந்தெடுக்கவில்லை.

இதையும் படிங்க: தோனியாலும், விராட் கோலியாலும் தான் என் கரியர் இப்படி ஆச்சு.. பரபரப்பான கருத்துக்களை கூறிய – அமித் மிஸ்ரா

அதனால் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேறு வழியில்லாத இஷான் கிசான் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதன் காரணமாக இத்தொடரில் விளையாடும் அவர் முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் தமிழ்நாட்டு மண்ணில் கம்பேக் கொடுத்துள்ள அவர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட தயாராக உள்ளேன் என்பதை தேர்வுக் குழுவுக்கு காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement