தோனியாலும், விராட் கோலியாலும் தான் என் கரியர் இப்படி ஆச்சு.. பரபரப்பான கருத்துக்களை கூறிய – அமித் மிஸ்ரா

Amit-Mishra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அமித் மிஸ்ரா கடந்த 2003-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2016-ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் விளையாடியிருந்தாலும் 22 டெஸ்ட் போட்டிகள், 36 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். தற்போது 41 வயதை எட்டியுள்ள இவர் 20 ஆண்டுகளுக்கு மேல் கிரிக்கெட் விளையாடி வந்தாலும் இந்திய அணியில் அவரால் பெரியதாக வாய்ப்புகளை பெற முடியவில்லை.

ஆனால் இன்றளவும் ஐபிஎல் தொடரில் தற்போது 41 வயது வரை விளையாடி வருவது அனைவரது மத்தியிலும் ஆச்சரியப்பட வைக்கிறது என்னதான் ஐபிஎல் தொடரில் சற்று சிறப்பாக செயல்பட்டாலும் இந்திய அணியில் அவரது பெரிய வெற்றிகரமான பயணமாக அமையவில்லை அவருக்கு பின்னால் வந்த பல்வேறு சுழற்பந்து வீச்சாளர்களும் இந்திய அணியில் இடம் பிடித்து நிறைய போட்டிகளில் விளையாடினர்.

- Advertisement -

ஆனால் தனது கரியரில் அதிக வாய்ப்புகளை பெற முடியாமல் போனதற்கு காரணமே முன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் விராட் கோலி போன்ற கேப்டன்கள் செய்த செயல் தான் என அவர் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணிகள் நான் தொடர்ந்து விளையாட முடியாதது ஏன் என்று தோனியிடம் கேட்டபோது :

அவர் அணியின் காம்பினேஷனில் நான் பொருந்தவில்லை என்று கூறினார். மேலும் நான் விளையாட வாய்ப்பு கேட்டபோது காம்பினேஷனுக்கு செட் ஆகவில்லை என்றால் ஓய்வு வழங்கப்படும் என்றுதான் கூறினார். தோனியின் முடிவை எதிர்த்து என்னால் எதுவும் பேச முடியவில்லை. நிர்வாகத்திடம் பேசினால் கூட தோனியிடமே வாய்ப்பு கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினர்.

- Advertisement -

அதேபோன்று 2016 ஆம் ஆண்டு நான் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த போது கோலி தான் என்னை ஆதரித்தார். ஆனாலும் நான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அவரும் என்னை அணியில் இருந்து நீக்கினார். அப்போது விராட் கோலி என்னிடம் வந்து அவருடன் பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் நான் அதிக எடையை தூக்கி பயிற்சி செய்ய முடியாது என்று கூறினேன்.

இதையும் படிங்க : நடராஜன் உட்பட துலீப் கோப்பையில் கழற்றி விடப்பட்ட 5 தரமான இளம் இந்திய வீரர்களின் பட்டியல்

அதன் பின்னர் கோலியும் என்னை அணியிலிருந்து நீக்கிவிட்டு எனக்கு தெளிவான பதிலை கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் நானே அவருக்கு மெசேஜ் அனுப்பி வாய்ப்பு கேட்டேன். ஆனாலும் அவர் சரியான பதிலை அளிக்கவில்லை என்று அமித் மிஸ்ரா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement