நடராஜன் உட்பட துலீப் கோப்பையில் கழற்றி விடப்பட்ட 5 தரமான இளம் இந்திய வீரர்களின் பட்டியல்

Duleep Trophy 22
- Advertisement -

இந்தியாவில் துலீப் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்குகிறது. அதில் விளையாடுவதற்காக ருதுராஜ், கில், ஸ்ரேயாஸ் ஐயர், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரின் தலைமையில் 4 அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த அணிகளில் ஜடேஜா முதல் ரியான் பராக் வரை ஏராளமான சீனியர் மற்றும் ஜூனியர் இந்திய வீரர்கள் தேர்வாகியுள்ளனர். இருப்பினும் அந்த அணிகளில் கழற்றி விடப்பட்ட சில இளம் வீரர்களை பற்றி பார்ப்போம்.

1. நடராஜன்: தமிழகத்தைச் சேர்ந்த இவர் டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தியதால் கடந்த 2020/21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் 3 வகையான கிரிக்கெட்டிலும் நன்றாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய அவர் அதன் பின் காயமடைந்தார்.

- Advertisement -

ஆனால் தற்போது குணமடைந்து 4 வருடங்களாகியும் இந்திய அணியில் நடராஜனுக்கு மறு வாய்ப்பு கொடுக்காத தேர்வுக்குழு இப்போது சாதாரண உள்ளூர் தொடரான துலீப் கோப்பையிலும் கழற்றி விட்டுள்ளது. இத்தனைக்கும் சுந்தர், சாய் கிஷோர் போன்ற மற்ற தமிழக வீரர்களை தேர்ந்தெடுத்துள்ள தேர்வுக்குழு அவரை மட்டும் துண்டாக கழற்றி விட்டது.

2. சஞ்சு சாம்சன்: 2015 முதல் இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகளை பெறாமல் தவித்து வரும் இவர் தமக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்துவதில்லை. அந்த வரிசையில் சமீபத்திய இலங்கை டி20 தொடரில் டக் அவுட்டான அவர் ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதற்கு தண்டனையாக துலீப் கோப்பையில் சஞ்சு சாம்சன் கழற்றி விடப்பட்டுள்ளார்.

- Advertisement -

3. ரிங்கு சிங்: தோனிக்கு பின் சிறந்த ஃபினிஷர் என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு இவர் டி20 கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார். அதே காரணத்தால் சமீபத்திய டெஸ்ட் தொடரில் ரிங்கு பேக்-அப் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் என்ன காரணம் என்று புரியாத அளவுக்கு தற்போது துலீப் கோப்பையில் அவர் கழற்றி விடப்பட்டுள்ளார்.

4. யுஸ்வேந்திர சஹால்: 2019 – 2021 வரை முதன்மை ஸ்பின்னராக செயல்பட்ட இவர் அதன் பின் கொஞ்சம் தடுமாற்றமாக செயல்பட்டார். அதனால் கழற்றி விடப்பட்ட இவர் மீண்டும் ஐபிஎல் தொடரில் போராடி கம்பேக் கொடுத்தார். அதனால் கடைசியாக 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த சஹால் சமீபத்திய இலங்கைத் தொடரில் காரணமின்றி கழற்றி விடப்பட்டார். அந்த வரிசையில் துலீப் கோப்பையிலும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

- Advertisement -

5. வெங்கடேஷ் ஐயர்: 2019 ஐபிஎல் ஃபைனலுக்கு கொல்கத்தா தகுதி பெற முக்கிய பங்காற்றிய இவர் 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமானார். அப்போது காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக பிசிசிஐ இவரை வளர்க்க நினைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தத் தவறிய அவர் கழற்றி விடப்பட்டார்.

இதையும் படிங்க: எதிரியே ஐசிசி தான்.. ஒன்னுமே செய்யாத பாபர் எப்படி நம்பர் ஒன்.. கில் என்ன செஞ்சாரு? பசித் அலி கேள்வி

இருப்பினும் 2024 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றில் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்த வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா 3வது கோப்பையை வெல்ல உதவினார். அதனால் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை துலீப் கோப்பையில் கூட தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கவில்லை.

Advertisement