14 போர்ஸ் 3 சிக்ஸ்.. 103 பந்தில் சதம்.. கடைசி நேரத்தில் அசத்திய இஷான் கிசான்.. அடுத்தடுத்த கம்பேக்.. பிசிசிஐக்கு மெசேஜ்

Ishan Kishan 2
- Advertisement -

துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது ரவுண்ட் செப்டம்பர் 12ஆம் தேதி துவங்கியது. அதில் அனந்தபூரில் துவங்கிய நான்காவது போட்டியில் இந்தியா பி மற்றும் சி அணிகள் மோதின. முன்னதாக முதல் ரவுண்ட் போட்டியில் இஷான் கிசான் இந்தியா டி அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இருப்பினும் தமிழ்நாட்டில் நடைபெற்ற புஜ்ஜி பாபு தொடரில் விளையாடிய அவர் காயத்தை சந்தித்ததால் துலீப் கோப்பை முதல் ரவுண்ட் போட்டியில் விளையாடவில்லை. இருப்பினும் 2வது ரவுண்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருடைய பெயர் நேற்று முன்தினம் பிசிசிஐ வெளியிட்ட இந்தியா ஏ, பி, சி, டி ஆகிய 4 அணிகளிலும் இடம் பெறவில்லை.

- Advertisement -

கடைசி நேரத்தில்:

அதனால் நேற்று இந்திய ரசிகர்கள் இசான் கிசானை மீண்டும் கொண்டு வாருங்கள் என்று ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து விமர்சித்தனர். அதன் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை இன்று காலை 9.30 மணிக்கு துவங்கிய 2வது ரவுண்டில் திடீரென ருதுராஜ் கைக்வாட் தலைமையிலான இந்தியா சி அணியில் இசான் கிசான் விளையாடுவதாக பிசிசிஐ செய்தி அறிவித்தது.

அந்த சூழ்நிலையில் துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சி அணிக்கு கேப்டன் ருதுராஜ் பவுண்டரியுடன் 4* (2) ரன்கள் அடித்த போது காயமடைந்து வெளியேறினார். இருப்பினும் மறுபுறம் தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானமாக விளையாடினார்.

- Advertisement -

2 கம்பேக் சதம்:

அவருடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரஜட் படிடார் 40 ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவரில் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து இசான் கிசான் மற்றும் தமிழக வீரர் பாபா இந்திரஜித் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடினர். அதில் இந்திரஜித் தமது ஸ்டைலில் மெதுவாக விளையாடினார். ஆனால் மறுபுறம் கொஞ்சம் அதிரடியாக விளையாடிய இசான் கிசான் முதல் ஆளாக அரை சதமடித்தார்.

இதையும் படிங்க: சச்சினால் என்ன பிரச்சனை? பொறாமையால் இந்தியாவை பழி சொல்லாதீங்க.. மைக்கேல் வாகனுக்கு கவாஸ்கர் பதிலடி

அதே வேகத்தில் அசத்தலாக பேட்டிங் செய்த அவர் 14 பவுண்டரி 3 சிக்சருடன் 103 பந்தில் சதமடித்து 111 (126) ரன்கள் விளாசி அவுட்டானார். ரஞ்சிக்கோப்பையில் விளையாடாததால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் தமிழ்நாட்டு மண்ணில் புப்ஜி பாபு தொடரில் சதமடித்து கம்பேக் கொடுத்தார். அந்த வரிசையில் தற்போது துலீப் கோப்பையிலும் சதமடித்துள்ள அவர் முழுமையாக ஃபார்முக்கு திரும்பி விட்டேன் என்பதை பிசிசிஐ, அஜித் அகர்கர், கம்பீர் ஆகியோருக்கு காண்பித்துள்ளார். அதே போல ரிஷப் பண்ட்க்கு அவர் போட்டியை கொடுக்கட்டும் துவங்கியுள்ளார்.

Advertisement