3ஆவது டி20 போட்டி : தனது 3 ஆவது இடத்தை இளம்வீரருக்கு விட்டுக்கொடுத்த கோலி – ஆனா கணக்கு தப்பா போச்சு

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி சற்று முன்னர் அகமதாபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற 2 டி20 போட்டிகளில் ஆளுக்கு ஒரு வெற்றி பெற்று தொடர் சமநிலை வகிக்கும் நிலையில் இரு அணிகளும் தங்களது இரண்டாவது வெற்றிக்காக இந்த போட்டியில் தற்போதைய விளையாடி வருகின்றனர். மைதானத்தில் ரசிகர்கள் இன்றி இந்த போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

INDvsENG

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது. அதன்படி தற்போது முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியின் துவக்க வீரராக ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் களம் இறங்குவார்கள் என்று கோலி கூறியபடி துவக்க வீரர்களாக அவர்கள் இருவரும் களமிறங்கினார்.

கடந்த இரண்டு போட்டிகளில் போலவே இந்தப் போட்டியிலும் 4 பந்துகளை சந்தித்த ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் பந்தில் போல்டாகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் நிலைத்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஷான் கிஷன் 4 ரன்களிலும், ரோஹித் சர்மா 15 ரன்களிலும் வெளியேறினர்.

Rahul

இதனால் இந்திய அணி 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடுகின்றனர். வழக்கமாக 3-வது இடத்தில் களம் இறங்கிய விளையாடும் விராட் கோலி சென்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் ஆட்டம் தொடரும் என்பதால் அவருக்கு மூன்றாவது இடத்தை விட்டுக் கொடுத்தார்.

Ishan-3

நான்காவது இடத்தில் களமிறங்க கோலி கோலி செய்த திட்டம் சரி என்றாலும் இருப்பினும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 4 ரன்களில் வெளியேறியதால் அவர் போட்ட இந்த கணக்கு சப்பாக முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement