- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த 2 பவுலர்களுக்கு எதிராக விளையாடுவது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் – இஷான் கிஷன் பேட்டி

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான இஷான் கிஷன் கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகள் மற்றும் 36 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் டாப் ஆர்டரில் அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதனால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தார்.

நான் விளையாட கஷ்டப்பட 2 பவுலர்கள் இவர்கள் தான் : இஷான் கிஷன்

ஆனாலும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நிர்வாகத்துடன் ஏற்பட்ட சில முரண்பாடு காரணமாக மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அவர் முதன்மை அணியில் இருந்தும் கழட்டி விடப்பட்டார். அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே இஷான் கிஷன் தனது கம்பேக் வாய்ப்பிற்காக போராடி வந்தார்.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் தொடர்களில் எல்லாம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தற்போது மீண்டும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இணைந்ததோடு சேர்த்து அந்த தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டி20 உலக கோப்பை தொடரிலும் இடம்பெற்று விளையாட இருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சந்தித்ததிலேயே மிகவும் கடினமான இரண்டு பந்துவீச்சாளர்கள் குறித்த சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் சந்தித்த சுழற்பந்து வீச்சாளர்களிலேயே மிகவும் கடினமான சுழற்பந்து வீச்சாளர் என்றால் அது யுஸ்வேந்திர சாஹல் தான். அவருக்கு எதிராக பேட்டிங் செய்வது என்பது எளிது கிடையாது. அவரது பந்து எவ்வாறு வரும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. அதனால் அவரது பந்தை அடிப்பது கடினம்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் அந்த இடத்தை சுமப்பது ரொம்ப கஷ்டம்.. சூரியகுமார் யாதவுக்கு – இர்பான் பதான் அறிவுரை

அதே போன்று வேகபந்து வீச்சாளர்களை பொறுத்தவரை ஜஸ்ப்ரீத் பும்ராவை தவிர வேறு யார் இருக்க முடியும்? அவருக்கு எதிராக நான் பேட்டிங் செய்யும்போது சிரமத்தை சந்தித்துள்ளேன். வலைப்பயிற்சியில் அவரது பந்துவீச்சை அடித்து விட்டால் கூட அடுத்த பந்தே பவுண்சர் வீசுவார் அந்த அளவிற்கு போட்டி மனப்பான்மை கொண்டவர் பும்ரா என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -