99 ரன்கள் அடித்தும் டக்அவுட்டில் அழுதபடி அமர்ந்திருந்த இஷான் கிஷன் – உருகவைத்த தருணம்

Kishan-2
- Advertisement -

மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் 10 ஆவது லீக் போட்டியில் 202 ரன்களை சேசிங் செய்து விளையாடிய முமபை அணி துவக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் இளம் வீரர் இஷான் கிஷன் மற்றும் அனுபவ வீரரான பொல்லார்ட் ஆகியோர் சாத்தியமற்ற போட்டியை இறுதியில் “டை” ஆக்கினார்கள். இவர்கள் இருவரும் 119 பாட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சிறப்பாக விளையாடி 99 ரன்களை குவித்த இஷான் கிஷன் மற்றும் 60 ரன்களை அதிரடியாக குவித்த பொல்லார்ட் ஆகியோர் சூப்பர் ஓவரில் களம் இறங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் மாறாக பொல்லார்ட் உடன் ஹார்டிக் பாண்டியா சூப்பர் ஓவரில் விளையாட வந்தார்.

அந்த சூப்பர் ஓவரை பெங்களூர் அணி சார்பாக சைனி வீச அந்த ஓவரில் இந்த ஜோடி சோபிக்க தவறியது. சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த பொல்லார்ட் 4 பந்துகளை சந்தித்த நிலையில் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில் சூப்பர் ஓவர் முடிவில் மும்பை அணி 7 ரன்களை மட்டுமே குவித்தது. அதன் பின்னர் 8 ரன்கள் அடித்து போட்டியை பெங்களூர் அணி எளிதில் வென்றது.

Pollard 1

இந்நிலையில் இந்த போட்டியில் 99 ரன்கள் குவித்து 19ஆவது ஓவரின் 5வது பந்தில் வெளியேறிய இஷான் கிஷன் தான் அவுட்டாகி வெளியேறி அதிலிருந்து சற்று கோபமாகவும், சோகமாக காணப்பட்டார். மேலும் வீரர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று கிளவுசை கழட்டி போட்டு அழுதபடி சேரில் உட்காராமல் கீழே உட்கார்ந்தார். அதற்கு காரணம் யாதெனில் இவ்வளவு சிறப்பாக விளையாடி தான் அணிக்கு வெற்றி பெற்று தர முடியவில்லையே என்று தான். வெற்றிக்கு தேவையாக இரண்டு பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது இருந்தபோது அவர் ஆட்டம் இருந்து வெளியேறியதால் இந்த வருத்தத்தை அவர் சோகமாக வெளிப்படுத்தினார்.

kishan-1

அதே போன்று சூப்பர் ஓவரிலும் தான் விளையாட தயாராக இருந்ததாகவும் அதனை ரோகித் ஏற்கவில்லை என்றும் அதனால் சூப்பர் அவரைப் பார்த்துக் கொண்டே அவர் கீழே அமர்ந்து அழுதவாறு தன் சோகத்தை வெளிப்படுத்தினார் என்று ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால் போட்டி முடிந்து ரோகித் அவரை கட்டித்தழுவி ஆறுதல் கூறியதையும் நாம் நேற்றைய போட்டியில் கண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement