
இந்தியாவில் துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி துவங்கியது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இசான் கிசான் தேர்வு செய்யப்பட்டிருந்தார். கடைசியாக 2023 டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக தேர்வாகியிருந்த அவர் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லி பாதியிலேயே வெளியேறினார்.
அதைத் தொடர்ந்து 2024 ஏப்ரல் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் உங்களை தேர்ந்தெடுக்க ரஞ்சிக்கோப்பையில் விளையாடி தயாராக இருக்குமாறு அவரிடம் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை செய்யாத இசான் கிசான் 2024 ஐபிஎல் தொடரில் விளையாட தயாரானார். அதனால் கோபமடைந்த பிசிசிஐ அவரை இந்திய அணியின் மதிய சம்பள ஒப்பந்தத்திளிருந்து அதிரடியாக நீக்கியது.
போதாகுறைக்கு 2024 ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாடியதால் அதன் பின் நடைபெற்ற இலங்கை தொடரில் இசான் கிசானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இந்திய அணியில் கம்பேக் கொடுக்க வேறு வழியில்லாத இசான் கிசான் தமிழ்நாட்டில் நடைபெற்ற புஜ்ஜி பாபு தொடரில் விளையாடினார். அந்தத் தொடரில் திருநெல்வேலியில் நடைபெற்ற போட்டியில் சதமடித்த அவர் தன்னுடைய திறமையையும் ஃபார்மையும் நிரூபித்தார்.
அதனால் அவரை 2024 துலீப் கோப்பையில் டி அணியில் விளையாட பிசிசிஐ தேர்ந்தெடுத்தது. ஆனால் புஜ்ஜி பாபு தொடரின் கடைசி ரவுண்டு போட்டியில் இஷான் கிசான் காயமடைந்தார். அதனால் 2024 துலீப் கோப்பையின் முதல் ரவுண்டில் அவர் விலகுவதாக பிசிசிஐ அறிவித்தது. இருப்பினும் பெரியளவில் காயமில்லாததால் 2வது ரவுண்டில் இசான் கிசான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2024 துலீப் கோப்பை 2வது ரவுண்டுக்காக அறிவிக்கப்பட்ட இந்தியா ஏ, பி, சி, டி ஆகிய 4 அணிகளிலும் இசான் கிசான் பெயர் இல்லை. அதனால் ஏமாற்றமடைந்த இந்திய ரசிகர்கள் செப்டம்பர் 11ஆம் தேதி இசான் கிசான் எங்கே? உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி ஃபார்முக்கு திரும்பியும் அவரை கழற்றி விட பார்க்கிறீர்களா? மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டிங் செய்தனர்.
இதையும் படிங்க: 45க்கு ஆல் அவுட்.. 275 ரன்ஸ் அவமான தோல்விக்காக.. இங்கிலாந்து 23 வருட சாதனை வெற்றியுடன் அயர்லாந்து பதிலடி
அந்த சூழ்நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி 2வது ரவுண்ட் போட்டிகள் துவங்கியது. அதில் இஷான் கிசான் திடீரென ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியில் விளையாடுவதாக பிசிசிஐ காலை 9.30 மணிக்கு அறிவித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. அதற்கு ரசிகர்கள் செய்த ட்ரெண்டிங்கை பார்த்து அஜித் அகர்கர், கௌதம் கம்பீர் ஆகியோரின் பரிந்துரையில் பிசிசிஐ இசான் கிசானை விளையாட வைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகின்றன.