- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஏற்கனவே அபிஷேக் சர்மாவுக்கு காய்ச்சல்.. இதுல இஷான் கிஷனுக்கு இப்படி ஆகனுமா? – பயிற்சியில் நேர்ந்த சோகம்

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் எந்த அணி இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

இஷான் கிஷனுக்கு ஏற்பட்டுள்ள காயம் :

இந்த டி20 உலககோப்பை தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணியானது தங்களது முதலாவது போட்டியில் அமெரிக்கா அணியை வீழ்த்தி தங்களது வெற்றி நடையை துவங்கியது. அதற்கடுத்து இன்று தங்களது இரண்டாவது லீக் ஆட்டத்தில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்தியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லீக் போட்டியானது பிப்ரவரி 12-ஆம் தேதி டெல்லி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ஏற்கனவே துவக்க வீரரான அபிஷேக் சர்மா காய்ச்சல் காரணமாக விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் துவக்க வீரராக களமிறக்கப்படலாம் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அபிஷேக் சர்மாவை தொடர்ந்து இஷான் கிஷனும் இந்த போட்டியில் விளையாட முடியாதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் நேற்றைய வலைப்பயிற்சியின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்து வீச்சில் காலில் பலத்த காயம் அடைந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னும் 4 விக்கெட் போதும்.. அஷ்வினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – அர்ஷ்தீப் சிங்

அதனால் வலியால் துடித்த அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. பின்னர் காலில் டேப்பும் போடப்பட்டது. இதனால் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் அவர் விளையாடுவாரா? அல்லது முன்னெச்சரிக்கை காரணமாக அவருக்கு ஓய்வு வழங்கப்படுமா? என்ற கேள்விகளும் தொடர்ந்து வருகிறது.

- Advertisement -