94 பந்துகளில் 173 ரன்கள் அடித்து தெறிக்கவிட்ட இஷான் கிஷன் – புதிய சாதனை செய்து அபாரம்

Ishan-kishan

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றிருக்கும் அணிகள் மற்ற அணியுடன் மோதி இறுதிப்போட்டிக்கு செல்லும். மேலும் நாக் அவுட் சுற்றுகளுக்கு பின்னர் இறுதிப்போட்டி நடைபெறும். இந்த கோப்பையை கைப்பற்ற அனைத்து மாநில அணிகளும் போட்டி போடும் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay hazare

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான சையது முஷ்டாக் அலி டிராபி 20 ஓவர்கள் கொண்டவையாகவும், விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர்கள் கொண்டவையாகவும் நடத்தப்படும். ஐபிஎல் தொடருக்கு முன்னர் நடைபெறும் இத்தொடரில் இளம் வீரர்கள் தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் போட்டிகளின்போது ஆடும் லெவனில் வாய்ப்பினைப் பெற இந்த தொடரில் தங்களது திறமையை காட்ட காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற விஜய் ஹசாரே 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட் மற்றும் மத்தியபிரதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் அணியின் கேப்டன் மற்றும் துவக்க வீரரான இஷான் கிஷன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 94 பந்துகளில் 173 ரன்களை குவித்தார். இதில் 11 சிக்ஸர்களும், 19 பவுண்டரிகளும் அடங்கும்.

ishan 1

இஷான் கிஷன் கடந்த ஐபிஎல் தொடரின்போது மும்பை அணிக்காக அதிரடியாக விளையாடி அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமை பெற்றார். கடந்த சீசனில் மட்டும் மும்பை அணி சார்பாக 516 ரன்கள் அடித்தார். அதுமட்டுமின்றி அதிக சிக்சர்களை அடித்த வீரராகவும் அவர் இருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஜார்கண்ட் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 422 ரன்களை எடுத்தது. இதன் மூலம் உள்நாட்டு போட்டியில் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை குவித்த அணியாக ஜார்கண்ட் அணி திகழ்கிறது.

- Advertisement -

Ishan kishan

அது மட்டுமின்றி மற்றொரு சாதனையாக இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக உள்ளூர் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தோனி மற்றும் தினேஷ் கார்த்தி ஆகியோரிடம் இருந்து தட்டி பறித்துள்ளார். தோனி அதிகபட்சமாக 139 ரன்களையும் மேலும் தினேஷ் கார்த்திக் 151 ரன்களையும் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.