கைரன் பொல்லார்டின் சாதனையில் கைவைத்த இஷான் கிஷான் – நேற்றைய போட்டியில் நடந்த சம்பவம்

Ishan-1
Ishan-1 MI
- Advertisement -

அபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 55-வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மனிஷ் பாண்டே தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் 171 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே மும்பை அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற வாய்ப்பு இருந்ததால் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியானது துவக்கத்திலேயே அதிரடி காட்டி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 235 ரன்கள் குவித்தது.

pandey 2

- Advertisement -

மும்பை அணி சார்பாக இஷான் கிஷன் 84 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 82 ரன்களும் குவித்தனர். பின்னர் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வெற்றி பெற்றிருந்தாலும் பிளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை தவற விட்டது.

இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை அணியின் துவக்க வீரராக விளையாடிய இஷான் கிஷன் ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்காக மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் 32 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரி 4 சிக்சர்கள் என 84 ரன்களை விளாசினார். அதிலும் குறிப்பாக 16 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் மும்பை அணிக்காக அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ishan
ishan MI

இதற்கு முன்னதாக மும்பை அணி சார்பாக 17 பந்துகளில் பொல்லார்டு, ஹார்டிக் பாண்டியா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிவேக அரைசதம் கடந்த சாதனையை மூவரும் தங்கள் வசம் வைத்திருந்தனர்.

- Advertisement -

இதையும் படிங்க : உலகக்கோப்பையில் நீதான் ஓப்பனர். ரெடியா இரு – இளம்வீரருக்கு வாக்கு கொடுத்த விராட் கோலி

இந்நிலையில் அதையும் தாண்டி தற்போது 16 பந்துகளில் அரைசதம் கடந்து ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் கடந்த மும்பை வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த அதிரடியான ஆட்டத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி அவரை உலக கோப்பை தொடரில் துவக்க வீரராக களமிறங்க உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement