INDvsSL : 2 ஆவது போட்டிக்கு பின் இருநாடுகளை சேர்ந்த 2 முக்கிய காயத்தால் ஹாஸ்பிடலில் அனுமதி – ரசிகர்கள் சோகம்

Ishan-Kishan-1
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லக்னோவில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா இமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று 2-வது போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி தொடக்க வீரர் நிஷாங்கா மற்றும் குணதிலகா ஆகியோர் 67 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

bumrah

- Advertisement -

இதில் குணதிலகா 38 (29) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அதிரடியாக பேட்டிங் செய்த நிஷாங்கா 53 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்தார். இருப்பினும் அடுத்து வந்த அசலங்கா, மிஸாரா, தினேஷ் சண்டிமால் ஆகியோர் இந்தியாவின் சூப்பரான பந்துவீச்சில் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

இந்தியா மிரட்டல் வெற்றி:
ஆனால் கடைசி நேரத்தில் களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் தசுன் சனாகா வெறும் 19 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் உட்பட 47* ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். இதனால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்த இலங்கை 183 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து 184 என்ற நல்ல இலக்கை துரத்திய இந்தியாவிற்கு கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க மற்றொரு வீரர் இஷான் கிசான் 16 ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்த ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இலங்கை பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை அதிரடியாகவும் சரவெடியாகவும் அடித்தார்கள்.

Shreyas

இதில் நீண்ட நாட்கள் கழித்து வாய்ப்பு பெற்ற சாம்சன் 39 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் பட்டையை கிளப்பிய ஸ்ரேயாஸ் அய்யர் 44 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உள்பட 74* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்தியாவின் வெற்றியை உறுதி படுத்தினார். அவருடன் கடைசி நேரத்தில் களமிறங்கி இலங்கை பந்துவீச்சாளர்களை கதறவிட்ட ரவீந்திர ஜடேஜா 18 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 45* ரன்கள் குவித்து அபார பினிஷிங் செய்ததால் 17.1 ஒவரிலேயே 186/3 ரன்களை எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக 2 – 0* என தொடரில் முன்னிலை பெற்ற இந்தியா கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.

- Advertisement -

ஹாஸ்பிடலில் இஷான் கிசான்:
முன்னதாக இந்த போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 4-வது ஓவரில் இலங்கை பவுலர் லஹிரு குமாரா வீசிய ஒரு பவுன்சர் பந்து அதை எதிர்கொண்ட இந்திய தொடக்க வீரர் இஷாந்த் கிசான் ஹெல்மட்டில் பட்டு அவரின் தலையை பதம் பார்த்தது. அதைப்பார்த்த களத்தில் இருந்த இலங்கை வீரர்கள் கூட பதறிப்போன நிலையில் உடனடியாக இந்திய அணியின் மருத்துவ குழுவினர் அவரின் அருகே சென்று அவரை சோதித்து பார்த்தார்கள். அதிர்ஷ்டவசமாக அவரின் தலையில் பெரிய அளவில் பந்து படாத காரணத்தால் லேசான வலி நிவாரணியை எடுத்துக்கொண்ட அவர் தொடர்ந்து பேட்டிங் செய்து 15 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

ishan kishan

இருப்பினும் உடைமாற்றும் அறைக்கு சென்ற அவர் தொடர்ந்து லேசான வலியை உணர்ந்ததால் போட்டி முடிந்த பின்னர் அவரை இந்திய அணி மருத்துவ குழு நிர்வாகம் அருகில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. வலி அதிகம் ஆகாமல் இருப்பதற்காக அவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு எனப்படும் ஐசியூவில் ஒரு சில மணி நேரங்கள் அனுமதிக்கப்பட்டு இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதுபற்றி அவரை பரிசோதித்த மருத்துவ குழுவில் இடம் வகிக்கும் டாக்டர் சுபம் பேசியது பின்வருமாறு. “இந்திய அணி நிர்வாகத்திடம் தொடர்ந்து நான் தொடர்பில் உள்ளேன். போட்டியின்போது தலையில் காயம் அடைந்த அந்த வீரர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிடி ஸ்கேன் செய்யப்பட்ட பின் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்” என கூறினார்.

shreyas iyer

தினேஷ் சந்திமால்:
அவரை போலவே நேற்றைய போட்டியின் போது இலங்கையின் விக்கெட் கீப்பர் மற்றும் நட்சத்திர வீரர் தினேஷ் சண்டிமாலுக்கும் கைவிரலில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்படி ஒரே போட்டியில் இரு நாடுகளைச் சேர்ந்த 2 முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி இருநாட்டு ரசிகர்களையும் சோகம் அடைய செய்தது.

- Advertisement -

இருப்பினும் இவர்களின் காயங்களை ஆராய்ந்த மருத்துவமனை நிர்வாகம் அதற்கு தகுந்த சிகிச்சையை அளித்துள்ளதால் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேறி அந்தந்த அணியுடன் சேர்ந்துள்ளார்கள் என்ற செய்தி சற்று முன்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : கேப்டன்னா இப்படி தான் இருக்கனும், ரோஹித்தை மனதார பாராட்டிய துணை கேப்டன் பும்ரா – எதற்கு தெரியுமா?

இதனால் இரு நாட்டைச் சேர்ந்த ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்த போதிலும் காயம் காரணமாக இன்று நடைபெற உள்ள இந்த தொடரின் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இவர்கள் பங்கேற்பது சந்தேகம் என தெரியவருகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு போட்டி துவங்குவதற்கு முன்பாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement