- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சாரி ஜஸ்பிரித் பும்ராவை அப்படி சொன்னது தப்பு தான்.. இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இஷா

காபா கிரிக்கெட் தானத்தில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 152, ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்கள் எடுத்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை அடுத்து விளையாடும் இந்தியா மீண்டும் திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. முன்னதாக இந்தப் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ராவை குரங்கு என்று முன்னாள் இங்கிலாந்து வீராங்கனை இஷா குஹா நேரலையில் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் மிகவும் மதிப்புள்ள பிரிமேட் என்று அவர் நேரலையில் சொன்னார்.

- Advertisement -

ரசிகர்கள் விளாசல்:

பிரிமேட் என்பது ஒரு வகையான குரங்கு இனத்தின் ஆங்கில பெயராகும். அதனால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள் தற்சமயத்தில் நம்பர் ஒன் பவுலராக அசத்தி வரும் வீரரை இப்படித்தான் பாராட்டுவீர்களா? என்று அவரை கடுமையாக விமர்சித்தார்கள். அத்துடன் கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்ட நீங்கள் ஒரு இந்திய வீரரை இப்படித்தான் பாராட்டுவீர்களா என்றும் ரசிகர்கள் சாடினார்கள்.

மேலும் எந்த மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் இருக்கும் நீங்கள் எப்படி வர்ணனையாளராக இருக்கிறீர்கள்? என்றும் இந்திய ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்தார்கள். இந்நிலையில் அதற்கு மன்னிப்பு கேட்பதாக இஷா குஹா மீண்டும் நேரலையில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் இந்திய ரசிகர்களிடம் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சாரி மன்னிச்சுடுங்க:

“நேற்று வர்ணனையில் நான் பல விதங்களில் விளக்கக்கூடிய ஒரு வார்த்தையை பயன்படுத்தினேன். அதில் ஏதேனும் குற்றம் இருந்தால் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். மற்றவர்களின் மரியாதை விஷயத்தில் நான் மிகவும் உயர்ந்த தரத்தை அமைத்துக் கொள்கிறேன். அதை நீங்கள் நன்றாக கேட்டால் இந்தியாவின் ஒரு தலைசிறந்த வீரருக்கு நான் உயர்ந்த பாராட்டுகளை மட்டுமே கொடுத்திருப்பேன்”

இதையும் படிங்க: கிங் என்ற கர்வமா? சச்சினை விட பெரியவரா? 2 ஜாம்பவான் சொல்லியும் கேட்காத கோலி.. 2011க்குப்பின் மோசமான சாதனை

“பும்ரா நான் மிகவும் போற்றும் ஒருவர். நான் அவரது சாதனையின் மகத்துவத்தை வடிவமைக்க முயற்சிக்கிறேன். அதற்காக தவறான வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளேன். அதற்கு மிகவும் வருந்துகிறேன். தெற்காசிய பாரம்பரியத்தை சேர்ந்த ஒருவர் என்ற முறையில் வேறு எந்த நோக்கமும் தீமையும் இல்லாமல் நான் பேசியதை மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். இறுதியில் தவறு செய்வது மனித இயல்பு என்றாலும் அதற்காக வருந்தி நேரலையில் மன்னிப்பு கேட்ட அவருக்கு ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்தார்.

- Advertisement -