ஏலத்தில் விற்கப்படாத யூசுப் பதான். அதிர்ச்சியில் ரசிகர்கள். ஆனால் இர்பான் பதான் என்ன சொல்லி இருக்காரு பாருங்க

Yusuf

கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாமல் போன வீரர்களில் இந்திய அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரும், இர்பான் பதான் அண்ணனுமான யூசப் பதான் ஒருவர். சன்ரைசர்ஸ் அணிக்காக சில ஆண்டுகளாக விளையாடி வந்த யூசுப் பதான் அந்த அணியால் கழற்றி விடப்பட்டார்.

Yusuf 1

தற்போது 2020ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்துக்கு அடிப்படை விலையாக 1 கோடியை அவர் பெற்றிருந்தார். ஆனால் பெரும்பாலான அணிகள் இளம் வீரர்களை எடுக்கவே ஆர்வம் காட்டியதால் மூத்த வீரர்களை வீரர்களான இவரைப்போன்ற அதிரடி வீரர்களுக்கு யாரும் தங்களது ஆர்வத்தை காண்பிக்கவில்லை. இந்நிலையில் அவர் இந்த ஐபிஎல் போட்டிகளில் விற்கப்படாமல் போனார்.

இந்நிலையில் யூசுப் பதான் விற்கப்படாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் ஒரு விடயமாக மாறியது. தற்போது இந்த விவரம் குறித்து இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் யூசப் பதான் குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : சிறிய விக்கல்கள் உங்கள் வாழ்க்கையை வரையறுக்கப்போவதில்லை. நீங்கள் மிகச் சிறந்தவராக இருந்தீர்கள். நீங்கள் ஒரு உண்மையான போட்டி வெற்றியாளர்.

உங்களை எப்போதும் நான் நேசிக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். சன் ரைசர்ஸ் இந்த வருடத்தில் புதிய வீரர்களாக விராட் சிங்,பிரியம் கார்க், மிச்செல் மார்ஷ் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோரை வாங்கியுள்ளது. கடந்த சீசனில் அவ்வளவாக யூசுப் பதான் சரிவர சோபிக்காததால் அவரை அணி நிர்வாகம் கழற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -