“எனது பெற்றோரை அவரும், அவரது மனைவியை நானும்” சங்ககாராவுடன் ஏற்பட்ட மோதல் – மனம்திறந்த இர்பான் பதான்

irfan-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான இர்பான் பதான் இந்திய அணிக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமானார் . அதன்பின்னர் பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி உள்ள இர்பான் பதான் 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளையும், 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Pathan

- Advertisement -

மேலும் 24 டி20 போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் தற்போது நேற்று முன்தினம் அவர் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை முடிவை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அவரது ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இர்பான் பதான் அவருடன் விளையாடிய முன்னாள் வீரர்கள் குறித்த நினைவுகளை பகிர்ந்தார். அதில் சங்கக்காராவுடன் ஏற்பட்ட ஸ்லெட்ஜிங் குறித்தும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து பேசிய இர்பான் பதான் கூறுகையில் : எனக்கு சங்கக்காராவுடன் நிகழ்ந்த ஒரு சம்பவம் நன்றாக நினைவிருக்கிறது. டெல்லியில் இந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டியின்போது சேவாக் காயத்தால் ஆட முடியாததால் அந்த போட்டியின் 2வது இன்னிங்சில் நான் ஓபனராக களம் இறங்கினேன்.

Irfan

அந்த போட்டியில் நன்றாக விளையாடி 93 ரன்கள் அடித்தேன். அப்போது இலங்கை அணி தோற்கும் சூழல் உறுதியாகிவிட்டது அப்படியான சூழ்நிலையில் சங்கக்காரா என்னை தனிப்பட்ட முறையில் தாக்கும் விதமாக எனது பெற்றோர் குறித்து மோசமாகப் பேசினார். உடனே நானும் பதிலுக்கு அவரது மனைவி பற்றி பேசினேன். இந்த சம்பவத்துக்கு பிறகு எங்கள் இருவர் இடையே மனக்கசப்பு இருந்தது.

irfan 2

ஆனால் சில காலம் கழித்து பஞ்சாப் அணியில் நாங்கள் இருவரும் இணைந்து ஆடும் போது ஒரு முறை சங்கக்கார அவரது மனைவியிடம் என்னை காட்டி இவர் தான் உன்னை பற்றி தப்பாக பேசினார் என்று சொன்னார் நானும் மன்னிப்பு கேட்டேன். அதன் பின்னர் சங்ககாரா நடந்த உண்மையை கூறினார் நான் முதலில் அவரது பெற்றோரை ஏசும் விதமாக பேசியதால் அவர் உன்னை பற்றி பேசினார் என்று அவர் மனைவியிடம் கூறினார். அதன் பின்னர் நாங்கள் நண்பர்களாகி விட்டோம் என்றும் இர்பான் பதான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement