கம்பீர் கூறியது தவறு. இந்த ஒரு விடயத்தில் தோனியை விட கோலிதான் எப்பவும் பெஸ்ட் – இர்பான் பதான் ஓபன் டாக்

- Advertisement -

2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான முன்னாள் கேப்டன் தோனி துவக்கத்தில் மிடில் ஆர்டரில் சரியாக விளையாடவில்லை. அதனைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாம் இடத்தில் இறங்கிய தோனி அந்த போட்டியில் 148 ரன்கள் குவித்தார். மேலும் அதனைத் தொடர்ந்து இலங்கை தொடரிலும் மூன்றாவது வீரராக களமிறங்கி 183 ரன்களை குவித்தார்.

- Advertisement -

இப்படி கங்குலியின் தலைமையின் கீழ் 3 ஆம் இடத்தில் இறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மேலும் அவர் அப்படி 3 ஆம் இடத்தில் ஆடிய அனைத்து போட்டிகளிலுமே அவர் தனது ரன் குவிப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் 2007ஆம் ஆண்டு அவருக்கு கேப்டனாக பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு மூன்றாவது இடத்தை இளம் வீரர்களுக்கு விட்டுக்கொடுத்து பின்வரிசையில் இறங்கி வந்தார்.

அந்த இடத்திலும் சிறப்பாக ஆடி வந்த தோனி இதுவரை 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10773 ரன்களை குவித்துள்ளார். இதற்கிடையில் 2009 ஆம் ஆண்டு இந்தியாவிற்காக அறிமுகமான விராட்கோலி மூன்றாவது இடத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்து. அது பலன் அளித்தால் தொடர்ந்து தோனி பின் வரிசையிலும், கோலி மூன்றாவது வரிசையிலும் இறங்கி வந்தனர்.

Dhoni

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் லைவில் உரையாடிய இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் : தோனியிடம் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படாமல் இருந்து அவர் தொடர்ச்சியாக மூன்றாவது இடத்தில் இறங்கி இருந்தால் பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை படைத்திருப்பார். தோனியை கிரிக்கெட் உலகம் இன்று வேறு மாதிரியாக பார்த்து இருக்கும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அதே உரையாடலில் கம்பீரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த இர்பான் பதான் : தோனி நினைத்திருந்தால் தொடர்ச்சியாக மூன்றாவது இடத்தில் ஆடி இருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இளம் வீரர்களுக்காக தனது இடத்தை விட்டுக் கொடுத்து இந்திய அணியின் பினிஷிங் ரோலில் இறங்கி வந்தார். அதேநேரம் தோனி மற்றும் கோலி ஆகிய இருவரையும் மூன்றாவது இடத்தில் ஒப்பிட்டால் கோலியே சிறந்தவர்.

kohli1

ஏனெனில் பேட்டிங் டெக்னிக் அடிப்படையில் கோலி மட்டுமே சிறந்த வீரர். தோனி நல்ல வீரர் தான் அவர் ஒரு லெஜன்ட் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் தற்போதைய கேள்வி மூன்றாவது இடத்தில் பெஸ்ட் யார் என்பதுதான். அந்த அடிப்படியில் 3 ஆம் இடத்தில் என்னை பொறுத்தவரை தோனியை விட கோலி தான் சரியானவர் என்று நினைப்பதாக இர்பான் பதான் தனது பதிலை நேரடியாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement