ஐ.பி.எல் தொடரில் அடுத்த 5 வருஷத்துக்கு இவங்க ராஜாங்கம் தான் நடக்கும் – இர்பான் பதான் கணிப்பு

Irfan-pathan
- Advertisement -

பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் ஒருவழியாக நடைபெற்று முடிந்துவிட்டது. ரசிகர்கள் இல்லாமல் நடந்த இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி பெரும் சாதனை படைத்துவிட்டது. ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி அற்புதமாக விளையாடி, வரும் அணிகளை எல்லாம் தூசு தட்டி விட்டுச் சென்றது.

mi

- Advertisement -

மறுபக்கம் டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு போன்ற அணிகள் மிக சிறப்பாக விளையாடிய டெல்லி அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. கடந்த மூன்று வருடமாக டெல்லி அணி கட்டமைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக மாற்றி ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அதுபோக பல இளம் வீரர்கள் களமிறக்கப்பட்டு தொடர்ந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த வருடம் இறுதிப் போட்டிக்கும் சென்றுவிட்டனர். இந்த தொடரில் தோல்வியடைந்தது ஒருபுறமிருந்தாலும் இனி வரும் காலங்களில் டெல்லி அணி மிகச் சிறப்பாக விளையாடும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசுகையில்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடக்கத்தில் இருந்ததைப்போல டெல்லி அணி அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு வலுவான ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருக்கும். பல வெற்றிகளைப் பெறும் என்று நம்புகிறேன். அந்த அணிக்கு ஒரு நல்ல பினிஷர் தேவை. ஹெட்மையர் மற்றும் மார்க்கஸ் ஸ்டோய்ணிஸ் ஆகியோர் நன்றாக விளையாடுகிறார்கள்.

அவர்களுக்கு இணையாக இன்னொரு வீரர் தேவை அதேபோல் அந்த அணியில் ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் தேவை இந்த இரண்டு வேலையும் செய்து விட்டால் டெல்லி அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக மாறிவிடும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்த அணியை அடித்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார் இர்பான் பதான்.

Advertisement