ஒன்றல்ல.. இரண்டல்ல.. 4 பேர் வெயிட்டிங்ல இருக்காங்க. ரிஷப் பண்டினை எச்சரித்த – இர்பான் பதான்

pathan 1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 க்கு 1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

INDvsRSA

- Advertisement -

இந்த தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணி தற்போது இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் கேப்டனாக அறிவிக்கப்பட்ட கே.எல் ராகுல் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அப்படி கேப்டனாக நியமிக்கப்பட்ட பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்துவது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்டை எச்சரித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறுகையில் :

pant 1

ரிஷப் பண்ட் தற்போது தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார். கேப்டன் பதவியில் இருக்கும் பண்ட் பேட்டிங்கில் சொதப்பினால் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். அதனை அவர் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இடத்திற்காக தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், கே.எல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். விக்கெட் கீப்பராக இருக்கும் வீரர் பேட்டிங்கில் எப்போதுமே சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க : ஐபிஎல் விரிவாக்கத்தால் உலகிற்கு ஆபத்து – இந்தியாவுக்கு எதிராக உலகநாடுகளை சேர்த்து ஐசிசியிடம் போராட தயாராகும் பாகிஸ்தான்

ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடுகிறேன் என்பதில் மட்டுமே குறியாக இருந்து எளிதாக விக்கெட்டை இழந்து வருகிறார். இதனை அவர் கவனித்து சுதாரித்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement