IND vs RSA : அவங்க வெயிட்டிங், இப்படியே போனா டி20ல காணாம போயிடுவீங்க – ரிஷப் பண்ட்டை எச்சரித்த முன்னாள் வீரர்

RIshabh Pant Fans
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏனெனில் டெல்லி மற்றும் கட்டாக் ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அசால்டாக சேசிங் செய்த தென்ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து தோல்விகளை பரிசளித்து 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்று அதிர்ச்சி கொடுத்தது. அதனால் தலை குனிவுக்கு உள்ளான இந்தியா இந்த தொடரின் கோப்பையை வென்று சொந்த மண்ணில் அவமானத்தை சந்திக்காமல் இருக்க வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் நேற்று களமிறங்கி 3-வது போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

IND vs RSA Chahal Axar Patel

- Advertisement -

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179/5 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் 57 (35) ரன்களும் இஷான் கிசான் 54 (35) ரன்களையும் எடுக்க இறுதியில் ஹர்திக் பாண்டியா 31* (21) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக பிரிடோரியஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

சொதப்பல் பண்ட்:
அதை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு இம்முறை ஆரம்பம் முதலே அற்புதமாக பந்துவீசிய இந்திய பவுலர்கள் டேவிட் மில்லர், க்ளாஸென் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களை பெரிய ரன்கள் எடுக்க விடாமல் சீரான இடைவெளிகளில் அவுட் செய்ததால் அந்த அணி 131 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. தற்போதைய நிலைமையில் இதேபோல் அடுத்த 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா உள்ளது. முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுக்கும் நிலையில் கேஎல் ராகுல் காயத்தால் விலகியதால் திடீரென கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரிஷப் பண்ட் அந்த பொறுப்பில் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

pant 1

ஒரு கேப்டனாக தரமான பவுலர்களுக்கு முழு ஓவர்களையும் வழங்காதது, அவர்களை எப்போது பயன்படுத்துவது என்பது போன்ற முக்கிய முடிவுகளை எடுப்பதில் சொதப்பும் அவர் இதுவரை இந்த தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தும் அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை. இத்தொடரில் இதுவரை 29, 5, 6 என சுமாரான ரன்களை மட்டுமே எடுத்துள்ள அவர் இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 40 இன்னிங்சில் வெறும் 723 ரன்களை 23.32 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார்.

- Advertisement -

காணாமல் போயிடுவீங்க:
ஆனால் ஐபிஎல் தொடரில் 2838 ரன்களை 34.61 என்ற சராசரியில் எடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இத்தனைக்கும் மெதுவாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட்டும் இவர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற ஜாம்பவான் எம்எஸ் தோனியால் முடியாத சாதனையை கூட அசால்டாக செய்து மறக்கமுடியாத சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து நிரந்தரமான இடத்தை பிடித்துள்ளார். ஆனால் அதிரடி காட்ட வேண்டிய டி20 கிரிக்கெட்டில் சுமாராக செயல்படுவது ஆச்சரியமாகவே உள்ளது.

irfan-pathan

இந்நிலையில் இந்தியாவுக்காக இதேபோல் தொடர்ந்து சுமாராக செயல்பட்டால் டி20 அணியிலிருந்து வாய்ப்பு பறிபோய்விடும் என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர இர்பான் பதான் உங்களது இடத்தை பிடிக்க இஷான் கிசான், தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் போன்றவர்கள் காத்திருப்பதை மனதில் வைத்துக் கொண்டு சிறப்பாக செயல்படுமாறு பண்ட்டுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் நிறையவே தடுமாறுகிறார். நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். தற்போது கேப்டனாக இருப்பதால் கேள்விகளின்றி இடம் பிடித்துள்ளீர்கள். ஆனால் இப்படியே போனால் விளையாடும் 11 பேர் அணியிலேயே வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் ஏற்கனவே தினேஷ் கார்த்திக், இஷான் கிசான் போன்ற விக்கெட் கீப்பர்கள் ப்ளேயிங் லெவனில் உள்ளனர். கேஎல் ராகுலும் எப்போதும் இடம் பெறக்கூடிய ஒரு விக்கெட் கீப்பர். எனவே உங்களுக்கு நிறைய போட்டி இருப்பதால் நீங்கள் அதிகப்படியாக சிறப்பாக செயல்பட வேண்டும்”

Pathan

“டி20 போட்டிகள் அவருக்கானது என்று நான் நம்புகிறேன். ரிஷப் பண்ட் ஒரு சூப்பர் ஸ்டார் வீரர் என்பதில் சந்தேகமில்லை. 24 வயது மட்டுமே நிரம்பிய இவர் அடுத்த 10 வருடங்களில் பெரிய அளவில் வர முடியும். ஆனால் அதற்கான வெள்ளோட்டம் இதுவரை தெரியவில்லை. ஆஃப் சைடில் அடிக்கும் போது மிகவும் கடினமாக அடிப்பதால் அவர் அவுட்டாகி விடுவதாக நான் கருதுகிறேன்.

இதையும் படிங்க : ஜாம்பவான் முரளிதரனின் ஆல் டைம் சாதனையை உடைத்த ட்ரெண்ட் போல்ட் – வித்யாசமான உலகசாதனை இதோ

அதிகப்படியான பவர் கொடுத்து அடிக்கும்போது உங்களது கால்கள் நகர்வதால் உங்களின் வடிவம் மாறுவது ஒரு பிரச்சனையாக மாறுகிறது. அவர் பெரிய ஷாட் அடிக்கும்போது கடினமாக அடிக்க முயற்சிக்கிறார். எனவே அதை தவிர்த்துவிட்டு தரையுடன் இணைந்தும் பெரிய ஷாட்டுகளை லெக் சைட் திசையிலும் அடிக்க முயற்சிக்காலம்” என்று ஆலோசனையும் வழங்கினார்.

Advertisement