ஷ்ரேயாஸ் ஐயருக்கு மாற்றாக தெ.ஆ ஒருநாள் தொடரில் இவரே 4 ஆம் இடத்தில் விளையாடனும் – இர்பான் பதான் கருத்து

Irfan Pathan
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 30-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை தென்னாப்பிரிக்க அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

4 ஆம் இடத்தில் விளையாட அவர் சரியா இருப்பார் : இர்பான் பதான்

இதன் காரணமாக டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக ஒருநாள் தொடரில் வெற்றி பெறும் முனைப்புடன் தற்போது இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை கடந்து சில தினங்களுக்கு முன்னர் பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

- Advertisement -

அந்த அணியில் கேப்டன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெறாததால் இந்திய அணியின் அனுபவ வீரரான கே.எல் ராகுல் இந்த தொடருக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு சேர்ந்து இளம் வீரர்களான ரிஷப் பண்ட், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா போன்ற முக்கிய வீரர்களுக்கு இந்த தொடரில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் அணியில் நான்காவது இடத்தில் களமிறங்கி அற்புதமாக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்த தொடரை தவறிவிடும் வேளையில் அவரது இடத்தில் விளையாடப்போவது யார்? என்பது குறித்த விவாதங்கள் அனைவரது மத்தியிலும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் நான்காவது இடத்தில் திலக் வர்மா விளையாடினால் சரியாக இருக்கும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : திலக் வர்மா ஆசிய கோப்பை தொடரின் போது அழுத்தமான சூழலிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அந்த ஒரு பெர்ஃபார்மன்ஸ் பார்த்தாலே அவர் மிகச் சிறப்பான வீரர் என்பது நமக்கு புரியும். அவரிடம் நல்ல பேட்டிங் டெக்னிக் இருக்கிறது.

இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளில் அஜிங்க்யா ரஹானேவின் மாபெரும் சாதனையை உடைத்த எய்டன் மார்க்ரம் – விவரம் இதோ

எனவே அவர் அதை ஒருநாள் தொடரிலும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். தனிப்பட்ட முறையில் என்னை கேட்டால் அவர் ஒருநாள் போட்டிகளில் நான்காவது இடத்தில் விளையாட வைக்கலாம். டி20 போட்டிகளில் ஏற்கனவே டாப் ஆர்டரில் அசத்தலாக விளையாடி வரும் அவர் ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை நான்காவது இடத்தில் விளையாடினால் அணிக்கும் சரி, அவருக்கும் சரி அது மிகச் சிறப்பான ரோலாக இருக்கும் என்று இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement