டெஸ்ட் போட்டிகளில் அஜிங்க்யா ரஹானேவின் மாபெரும் சாதனையை உடைத்த எய்டன் மார்க்ரம் – விவரம் இதோ

Aiden Markram
- Advertisement -

தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பித்ததில் இருந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

ரஹானேவின் சாதனையை முறியடித்த எய்டன் மார்க்ரம் :

ஏற்கனவே கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்திய தென்னாப்பிரிக்கா அணி கவுஹாத்தி நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 408 ரன்கள் என்கிற மிகப்பெரிய வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கவுகாத்தி நகரில் நடைபெற்று முடிந்த இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அந்த அணியின் நட்சத்திர வீரரான எய்டன் மார்க்ரம் இந்திய அணியின் அனுபவ வீரரான அஜிங்க்யா ரஹானேவின் மாபெரும் சாதனை ஒன்றினை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் முறியடித்து அசத்தலான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் அதிக கேட்ச்களை பிடித்த வீரராக இந்திய அணியின் அனுபவ வீரரான அஜிங்க்யா ரஹானே முதலிடத்தில் இருந்தார்.

- Advertisement -

கடந்த 2015-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ரஹானே 8 கேட்ச்களை பிடித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் :

இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிராக இப்படி செய்யுறது சாதாரண விடயம் கிடையாது.. வெற்றி குறித்து – தெம்பா பவுமா மகிழ்ச்சி

பங்கேற்று விளையாடியிருந்த தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 கேட்ச்களை பிடித்து ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement