இந்திய அணிக்கு எதிராக இப்படி செய்யுறது சாதாரண விடயம் கிடையாது.. வெற்றி குறித்து – தெம்பா பவுமா மகிழ்ச்சி

Temba Bavuma
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்திய அணியை இங்கு வீழ்த்தியது மகிழ்ச்சி : தெம்பா பவுமா

அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 22-ஆம் தேதி துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி விளையாடி வந்த தென்னாப்பிரிக்க அணியானது இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்றதோடு சேர்த்து இந்த தொடரையும் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறுகையில் : இந்திய அணிக்கு எதிராக இந்த தொடரில் பெற்ற இந்த வெற்றி மிகப் பெரிய ஒன்றாக பார்க்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக காயத்திற்கு பிறகு மீண்டு வந்து சிறப்பான ஆட்டத்தை நான் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவிற்கு வந்து இங்கு நடக்கும் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றுவது என்பது எளிதான ஒன்று கிடையாது. அதனால் இந்த வெற்றி உண்மையிலேயே எங்களுக்கு ஸ்பெஷலானது. எங்களது அணியில் உள்ள அனைவருக்குமே இந்த வெற்றியில் சரிசமமான பங்கு உள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் நாங்கள் ஒரு அணியாக மிகச் சிறப்பான திட்டத்துடன் செயல்பட்டதாலே இந்திய அணியை வீழ்த்த முடிந்தது. இந்த தொடரில் எங்களது அணியை சேர்ந்த அனைத்து வீரர்களுமே அற்புதமான பங்களிப்பை வழங்கி உள்ளனர் என தெம்பா பவுமா கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இப்படி நடந்ததில் எனக்கு ரொம்ப வருத்தம் தான்.. தோல்வி குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்திய – ரிஷப் பண்ட்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க அணியானது அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

Advertisement