இந்திய நாட்டை நினைச்சா உடம்பு வலி வருமா? அந்த 2 இங்கிலாந்து பவுலர்களை பாத்து பும்ரா விளையாடனும்.. பதான்

Irfan Pathan
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 3வது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதன் காரணமாக தொடரை சமன் செய்ய 4வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

அந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுவாரா என்பது மீண்டும் சந்தேகமாகவே காணப்படுகிறது. ஏனெனில் பணிச்சுமை காரணமாக இந்தத் தொடரில் அவர் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆரம்பத்திலேயே அறிவித்தார். அந்த சூழ்நிலையில் முதல் போட்டியில் இந்தியா 5 சதங்களை அடித்தும் தோல்வியை சந்தித்ததால் 2வது போட்டியில் பும்ரா விளையாட வேண்டுமென அனைவரும் சொன்னார்கள்.

- Advertisement -

நாட்டுக்காக ஆடுங்க:

ஆனால் அப்போதும் ஓய்வெடுத்த பும்ரா 3வது போட்டியில் விளையாடி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இந்நிலையில் நாட்டுக்காக விளையாடும் போது பணிச்சுமை வருமா? என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் மறைமுகமாக வினவியுள்ளார். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் 3வது போட்டியில் ஓய்வே எடுக்காமல் நீண்ட நேரம் பவுலிங் செய்து இந்தியாவை தோற்கடித்ததாக அவர் கூறியுள்ளார்.

எனவே அவர்களைப் போல பும்ராவும் இத்தொடரில் முழுமையாக விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தும் பதான் இது பற்றி பேசியது பின்வருமாறு. “5வது நாள் காலையில் பென் ஸ்டோக்ஸ் மராத்தான் போல பவுலிங் செய்து தொடர்ந்து 9.2 ஓவர்கள் வீசினார். அவர் என்ன ஒரு அற்புதமான பிளேயர். பேட்டிங், பௌலிங் ஆகியவற்றில் அசத்திய அவர் ரிஷப் பண்ட்டை அபாரமாக ரன் அவுட் செய்தார்”

- Advertisement -

பதான் அட்வைஸ்:

“அங்கே பணிச்சுமை நிர்வாகம் பற்றி எந்த பேச்சுக்களும் இல்லை. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. பும்ரா 5 ஓவர்கள் வீசி விட்டு ரூட் வரும் வரை அடுத்ததாக பவுலிங் செய்ய காத்திருந்தார். அது ஏமாற்றத்திற்குரியது. 2வது போட்டியில் விளையாடாத அவருடைய பணிச்சுமை நிர்வகிக்கப்படுகிறது. நீங்கள் விளையாடும் போது எந்த பணிச்சுமையும் இருக்காது. எந்த விலைக்காவது இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டும்”

இதையும் படிங்க: வராத கோலியின் ஸ்டைலை விட்டுட்டு.. உங்க ப்ராட்மேன் ஸ்டைலை ஃபாலோ பண்ணுங்க.. கில்லுக்கு மஞ்ரேக்கர் அறிவுரை

“4 வருடங்கள் கழித்து டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆச்சர் நிறுத்தவே இல்லை. 6 ஓவர்களை வீசிய அவர் மீண்டும் வந்து பவுலிங் செய்தார். பென் ஸ்டோக்ஸ் பணிச்சுமை பற்றி எப்போதும் பேசியது கிடையாது. அவரால் தொடர்ந்து 9 ஓவர்கள் வீச முடிந்தால் நாம் பின்தங்கி விடுவோம்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து 4வது போட்டி 8 நாட்கள் ஓய்வுக்கு பின் ஜூலை 23ஆம் தேதி துவங்குகிறது.

Advertisement