வராத கோலியின் ஸ்டைலை விட்டுட்டு.. உங்க ப்ராட்மேன் ஸ்டைலை ஃபாலோ பண்ணுங்க.. கில்லுக்கு மஞ்ரேக்கர் அறிவுரை

Sanjay Manjrekar
- Advertisement -

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் இங்கிலாந்து சொந்த மண்ணில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக 3வது போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு கேப்டன் சுப்மன் கில் அணுகுமுறை முக்கிய காரணமானதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதாவது 3வது நாள் மாலையில் இங்கிலாந்து 2 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போது இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை வீணடிக்கும் வகையில் நடந்து கொண்டார். அதனால் கோபமடைந்த கில் அவரிடம் கையை நீட்டி சில மோசமான வார்த்தைகளை சொல்லி வாக்குவாதம் செய்தது இங்கிலாந்து அணியை நெருப்பாக மாற்றியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

வராத கோலியின் ஸ்டைல்:

குறிப்பாக “எங்களுடைய இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை சீண்டினால் மொத்த அணியும் சேர்ந்து வந்து பதிலடி கொடுப்போம்” என்று கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரித்தார். இந்நிலையில் விராட் கோலி போல சுப்மன் கில் ஆக்ரோஷமாக செயல்பட முயற்சிப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த ஸ்டைல் இயற்கையாக கில்லுக்கு வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே 2வது போட்டியில் டான் ப்ராட்மேன் போல அமைதியாக விளையாடிய பெரிய ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த சொந்த ஸ்டைலை கில் பின்பற்ற வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி மஞ்ரேக்கர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் எதற்கும் குறைந்து விடாத இந்தியர்கள் என்ற பிராண்டை ஒருவர் உருவாக்க விரும்பினால், அது நிறைய கவனத்தைக் கொண்டு வரும்”

- Advertisement -

உங்க ஸ்டைலை பாருங்க:

“சுப்மன் கில் அதற்காக அதை செய்யவில்லை என்று நான் நம்புகிறேன். விராட் கோலி அப்படி செய்வது இயற்கையானது. அவருடைய மொத்த ஆட்டமே ஆக்ரோசத்தால் முன்னேறியது. ஆனால் கில்லுக்கு ஆக்ரோசம் இயற்கையாக வருவது போல் தெரியவில்லை. விராட் கோலி களத்திற்கு வந்தால் எதிரணி வீரர்களின் முகத்தைப் பார்த்து பயப்படாமல் சதத்தை அடிப்பார். ஆனால் கில் 2வது போட்டியில் பிராட்மேன் போல பாடி லாங்குவேஜ் வெளிப்படுத்தி அற்புதமாக விளையாடினர்”

இதையும் படிங்க: 336 ரன்னில் தோற்ற இங்கிலாந்து லார்ட்ஸில் ஜெய்க்க கில் தான் காரணம்.. அட்டிடியூடை கத்துக்கோங்க.. ஃகைப் சாடல்

“ஆனால் 3வது போட்டியில் அவருடைய ஆட்டத்தை பார்த்தால் இதற்கு முன் 2 முறை டக் அவுட்டானது போல இருந்தது. இதிலிருந்து ஆக்ரோஷம் அவருக்கு இயற்கையாக வரவில்லை என்பது தெளிவாகிறது” என்று கூறினார். அத்துடன் ஏற்கனவே ஒன்று விராட் கோலி போல ஆக்ரோஷமாக இருங்கள் அல்லது தோனி போல அமைதியாக செயல்படுங்கள் என்று அவரை மஞ்ரேக்கர் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement