- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஷஸ் பட் கமின்ஸை பாத்து.. பும்ரா கத்துக்கிட்டு இந்தியாவுக்காக இதை செய்யனும்.. பதான் விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தனித்துவமான பவுலிங் ஆக்சனை கொண்டுள்ளார். அதனால் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்று வர்ணிக்கப்பட்ட அவர் 2018 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இன்று ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலித்து வருகிறார். கடந்த 7 வருடங்களில் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ள அவர் சில காயங்களையும் சந்தித்துள்ளார்.

குறிப்பாக கடந்த ஆஸ்திரேலிய தொடரில் முழு மூச்சுடன் 5 போட்டிகளில் விளையாடிய அவர் 32 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அதனாலேயே கடைசிப் போட்டியில் காயத்தைச் சந்தித்த அவர் முதுகில் மேற்கொண்ட அறுவை சிகிச்சையால் இங்கிலாந்தில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட முடியுமென்று ஆரம்பத்திலேயே அறிவித்தார். துரதிஷ்டவசமாக அந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறவில்லை.

- Advertisement -

பட் கமின்ஸை பாருங்க:

அதனால் ஒன்று முழுமையாக விளையாடுங்கள் அல்லது ஓய்வு பெறுங்கள் என்று நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் அவரை வெளிப்படையாக விமர்சித்தனர். இதற்கிடையே நவம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் முழுமையாக விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் அக்டோபர் மாதம் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களிலிருந்து விலகியுள்ளார்.

போதுமான ஓய்வெடுத்து புத்துணர்ச்சியாக ஃபிட்டாகி எடுத்து சொந்த மண்ணில் ஆஷஸ் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் கமின்ஸ் அந்த முடிவைஎடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட் கமின்ஸ் பார்த்து பும்ரா கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார். அதாவது முக்கிய தொடருக்கு முன்பாக பும்ரா போதுமான ஓய்வெடுத்து இந்தியாவுக்காக முழுமையாக விளையாட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

பதான் விமர்சனம்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஷஸ் தொடருக்காக பட் கமின்ஸ் தனது பணிச்சுமையை நிர்வகிக்கும் பொருட்டு நிறைய போட்டிகளைத் தவிர்க்க உள்ளார் என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆனால் ஆஷஸ் தொடரின் போது கமின்ஸ் தன்னுடைய பணிசுமையை நிர்வகிப்பாரா? என்பதே என்னுடைய கேள்வி. சேனா நாடுகளில் வெற்றி பெறுவது கடினம்”

இதையும் படிங்க: ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட காயத்தால் இஷான் கிஷனுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம் – விவரம் இதோ

“அங்கே உங்களுடைய முதன்மை பவுலர் முடித்தளவுக்கு நிறையப் போட்டிகளில் விளையாட வேண்டும். ஆனால் அந்த முக்கியமான தொடரில் சென்று விட்டு நீங்கள் பணிச்சுமையை நிர்வகித்தால் எதிர்பார்க்கும் வெற்றியைப் பெற முடியாது. பணிச்சுமை குறித்து நிறைய பேச்சுக்கள் காணப்படுகின்றன. அது பும்ரா அல்லது மற்ற அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் முக்கியம் என்று நானும் கருதுகிறேன். அதை நீங்கள் செய்வதற்கு பிசிசிஐ மற்றும் என்சிஏ தேவையான வசதிகளையும் இடத்தையும் செய்து கொடுத்துள்ளனர்” என்று கூறினார்.

- Advertisement -