சர்வதேச போட்டிகளில் சாதிக்க இளம்வீரர்கள் இதனை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் – இர்பான் பதான் பேட்டி

Irfan-pathan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான இர்பான் பதான் இந்திய அணிக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமானார் . அதன்பின்னர் பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி உள்ள இர்பான் பதான் 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளையும், 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Pathan

- Advertisement -

மேலும் 24 டி20 போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் தற்போது 4 ஆம் தேதி அவர் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை முடிவை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அவரது ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பதான் இளம் வீரர்கள் குறித்த கருத்து ஒன்றையும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதில் பதான் கூறியதாவது : இந்திய கிரிக்கெட்டில் நான் ஒரு ஆல்ரவுண்டர் என திருப்திக்காக எது வேண்டுமானாலும் செய்வேன். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளர், பயிற்சியாளர், சமூக பணி மற்றும் சில படங்களிலும் நடித்து வருகின்றேன்.

pathan 2

இந்நிலையில் நான் வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஒரு விடயத்தை மட்டும் குறிப்பாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது மிகப் பெரிய ஒப்பந்தம் கிடைக்கிறது என்பதற்காக அதிக கவனத்தை அதிலேயே செலுத்துகின்றார். ஆனால் ஒரு விடயத்தை நீங்கள் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

irfan-pathan

உங்களுக்கு அந்த ஒப்பந்தத்தை பெற்றுத் தந்ததே கிரிக்கெட் தான் என்பதை மறந்துவிடக்கூடாது. ஐபிஎல் தொடர்களில் சாதிப்பது போல சர்வதேச கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் சர்வதேச கிரிக்கெட்டில் உச்சத்தை தொடலாம் என்று பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement