- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வஷிங்க்டன் சுந்தர் மீது நிர்வாகம் வைத்திருக்கும் இந்த நம்பிக்கை சரியானது – இர்பான் பதான் கருத்து

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

வாஷிங்க்டன் சுந்தர் மீது நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கை சரியானது : இர்பான் பதான்

அதனை தொடர்ந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது துவங்கி நடைபெற்று வருகிறது. போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய அணி 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை இணைத்தது சரியான ஒரு முடிவு என்றும் அவர் மீது நிர்வாகம் வைத்துள்ள நம்பிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று என இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :

வாஷிங்டன் சுந்தரின் வேல்யூ என்னவென்று நிர்வாகம் சரியாக முடிவு செய்துள்ளது. அவரிடம் இருக்கும் பந்துவீச்சு திறன் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அவரால் கை கொடுக்க முடியும். அதன்மீது நம்பிக்கை வைத்து நிர்வாகமும் அவருக்கு ஒரு நல்ல ரோலை டெஸ்ட் அணியில் வழங்கியுள்ளது. நிச்சயம் அவரை இந்த ரோலில் தொடர்ந்து பயன்படுத்தினால் அது இந்திய அணிக்கு நல்லது தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த வேளையில் அவரது இடத்திற்கு சரியான மாற்றுவீரர் வாஷிங்டன் சுந்தர் தான் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து தங்களது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க : விராட் கோலியை சமன் செய்து கே.ராகுல் மற்றும் புஜாராவை முந்திய ரவீந்திர ஜடேஜா – விவரம் இதோ

இவ் வேளையில் வாஷிங்டன் சுந்தரை பாராட்டி இர்பான் பதானும் சில கருத்துக்களை குறிப்பிட்டுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான வாஷிங்க்டன் சுந்தர் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகள், 23 ஒருநாள் போட்டிகள் மற்றும் 54 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -