ஷ்ரேயாஸ் ஐயர் கண்டிப்பா இதை நெனச்சி ரொம்பவே கஷ்டப்பட்டு இருப்பார் – இர்பான் பதான் ஓபன்டாக்

Irfan Pathan
- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான கேப்டன்சியின் மூலம் அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். அதுமட்டும் இன்றி அந்த தொடர் முழுவதுமே அவரது பேட்டிங்கும் மிகச் சிறப்பாக இருந்தது. இதன் காரணமாக அவரை இந்திய டி20 அணியின் மிடில் ஆர்டரில் சேர்க்க வேண்டும் என்ற கருத்துக்களும் இருந்து வந்தது.

ஷ்ரேயாஸ் ஐயர் வருத்தம் அடைந்து இருப்பார் : இர்பான் பதான் கருத்து

இந்தியா ஒருநாள் அணியை பொறுத்தவரை முதன்மை வீரராக விளையாடி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் டி20 போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அவரை சேர்க்க வேண்டும் என்று ஒருபுறம் முன்னாள் வீரர்கள் பலரும் பேசி வந்த வேளையில் இளம் வீரர்களை டி20 அணிக்குள் கொண்டு வந்த இந்திய அணி 2026 டி20 உலக கோப்பை தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்த ஆண்டிற்கான 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் உலக கோப்பை இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது நிச்சயம் அவருக்கு வருத்தத்தை அளித்திருக்கும் என முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

நிச்சயமாக இந்திய டி20 அணியில் ஒரு பகுதியாக இல்லாதது ஷ்ரேயாஸ் ஐயருக்கு வருத்தத்தை அளித்திருக்கும். ஏனெனில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விளையாடும் அனைத்து திறமையும் அவரிடம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் டி20 போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே அவர் இந்திய டி20 அணியில் இல்லாதது நிச்சயம் அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : அவர் மட்டும் இல்லனா இந்திய அணி இந்த டி20 உலககோப்பையை ஜெயிச்சிருக்காது – சபா கரீம் கருத்து

சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் அவர் வேகப்பந்து வீச்சுக்கு எதிராகவும் தனது திறனை மெருகேற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்த ஆண்டும் அசத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் இர்ஃபான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement