சி.எஸ்.கே அணியில் இவரது இழப்பு யாராலும் ஈடு கட்டமுடியாத ஒன்று – இர்பான் பதான் வருத்தம்

ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது வரை பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகளாக வந்துகொண்டிருக்கிறது. முதலில் அந்த அணியில் உள்ள 13 பேருக்கு கொரோனவைரஸ் வைரஸ் தொற்றியது. இதில் இரண்டு வீரர்களும் அடக்கம். அதை தாண்டி திடீரென சுரேஷ் ரெய்னா அணியில் வீரர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு தொடரில் இருந்து வெளியேறிவிட்டார்.

பின்னர் ஹர்பஜன்சிங் துபாய் வந்து சேரவே இல்லை திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து தான் விலகுவதாகவும் அறிவித்துவிட்டார் . இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து அணிகளை விட நான்கு நாட்கள் தாமதமாகத்தான் தங்களது பயிற்சியை துவக்கி இந்நிலையில் அணியில் இருந்து வெளியேறிய சுரேஷ் ரெய்னா. மட்டும் ஹர்பஜன் சிங் ஆகிய இரண்டு வீரர்களுக்கு மாற்று வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை அறிவிக்கவில்லை.

இந்த இரண்டு வீரர்களின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் அவர் கூறுகையில்…ஹர்பஜன்சிங் போன்றவை மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளரை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அவரது இடத்தை நிரப்ப 3 – 4 பந்துவீச்சாளர்களை ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருக்கிறது சிஎஸ்கே.

Harbhajan

ஆனால் அவரது இடத்தை அவர்களால் நிரப்பவே முடியாது அப்படிப்பட்ட வீரர் இவர். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய காலத்திலும் சரி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிக்கொண்டிருக்கும் காலத்திலும் சரி எப்போதும் மிகச்சிறந்த வீரராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதே நேரத்தில் சுரேஷ் ரெய்னா குறித்து பேசிய அவர் சுரேஷ் ரெய்னா திடீரென ஐபிஎல் தொடரிலிருந்து ஏன் விலகினார் என்று எனக்கு தெரியவில்லை.

- Advertisement -

Raina

ஆனால் என்னுடைய நம்பிக்கை படி அவர் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வந்து ஆடுவார் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு வாய்ப்பு மிகவும் அதிகம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதேபோல்தான் தோனி ஓய்வு பெற்றவுடன் சுரேஷ் ரெய்னா ஓய்வு அறிவித்து தனக்கு மிகப் பெரும் ஆச்சரியமாக அமைந்ததாக இர்பான் பதான் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.