இவங்கள நெனச்சா ரொம்ப பாவமா இருக்கு. இவங்களுக்கு கோப்பையை ஜெயிக்கிற ராசியே இல்ல – இர்பான் பதான் வெளிப்படை

pathan 1
- Advertisement -

ஐபிஎல் 14வது சீசன், கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் இத்தொடர் ஆரம்பித்து 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில், தொடரில் பங்கேற்றிருந்த வீரர்களுக்கு மத்தியிலும் கொரானா பரவியது. எனவே நடப்பு ஐபிஎல் தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக, மே மாதம் 4ஆம் தேதி அறிவித்தது பிசிசிஐ. நடந்து முடிந்துள்ள 29 போட்டிகளின் முடிவில் டெல்லி அணியானது 8 போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்று முதலிடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியிலில் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

- Advertisement -

இந்த புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ள விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, இத்தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எந்த ஆண்டும் இல்லாமல் இத்தொடரை அற்புதமாக ஆரம்பித்த பெங்களூர் அணிக்கு இப்படி ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது பெரிய இழப்பாகத்தான் இருக்கும், மேலும் இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் மற்ற அணிகளை விட பெங்களூர் அணிதான் மிகுந்த வருத்தத்தில் இருக்குமென்று கருத்து கூறியுள்ளார்

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரானா இர்ஃபான் பதான். இதுகுறித்த ஸ்டார் போர்ட்ஸ் சேனலுக்கு பேட்ட்டியளித்த அவர் பெங்களூர் அணியைப் பற்றி கூறும்போது, இந்த ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால், நிச்சயமாக பெங்களூர் அணிக்குதான் மிகுந்த ஏமாற்றமாக இருக்கும். ஏனெனில் அவர்கள் இந்த ஐபிஎல் தொடரை மிகச் சிறப்பாக தொடங்கியிருந்தனர். இத்தொடரில் 5 போட்டிகளை வெற்றி பெற்றுள்ள அந்த அணி புள்ளிப் பட்டியிலில் மூன்றாமிடத்தில் இருக்கிறது. விராட் கோலி அந்த அணியை அற்புதமாக இந்த தொடரில் வழிநடத்தி இருக்கிறார், மேலும் இதற்கு முன்னதாக பெங்களூர் அணிக்கு பிரச்சனையாக இருந்த அனைத்து விஷயங்களையும் இந்த தொடரில் அந்த அணி சரி செய்து இருக்கிறது.

Maxwell

இந்த ஆண்டு பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல், அந்த அணியின் மொத்த பாரத்தையும் தாங்கி இருந்தார். அந்த அணி எப்போதெல்லாம் சறுக்கியதோ அப்போதெல்லாம் தனது பொறுப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். பெங்களூர் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்சனையை ஏபி டி சரி செய்தார் என்பதோடு மட்டுமல்லாமல் அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் தனது அற்புதமான திறமையின் மூலம் எதிரணி டெத் ஓவர்களில் ரன்களை குவிக்காத வண்ணம் பார்த்துக் கொண்டார்.

- Advertisement -

இன்னொரு பௌலரான ஹர்ஷல் பட்டேல், அந்த அணிக்கு தேவையான நேரத்தில் எல்லாம் விக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார். இப்படி இந்த தொடரில் பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே சம பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ள பெங்களூர் அணி, இந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பையைக் கூட கைப்பற்றியிருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் ” ஈ சாலா கப் நம்தே” என ஆர்பரித்து வந்த பெங்களூர் அணியின் ரசிகர்கள்தான் இந்த ஐபிஎல் தொடரின் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பார்கள் என நினைக்கிறேன்.

ABD

ஏனெனில் மேக்ஸ்வெல் மற்றும் ஏபி டி வில்லியர்சின் அற்புதமான பேட்டிங், சிராஜ் மற்றும் ஹர்ஷல் பட்டேலின் பௌலிங் திறமை, விராட் கோலியின் கேப்டன்சி என அனைத்தும் ஒன்றாக கலந்த பெங்களூர் அணி, நிச்சயமாக இந்த ஆண்டு கோப்பைய கைப்பற்றும் என்று அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த நம்பிக்கையை உடைக்கும் விதமாக தொடர் இப்படி பாதியிலேயே நிறுத்தப்பட்டது, அவர்களுக்கு மிகுந்த வேதனையை கண்டிப்பாக ஏற்படுத்தியிருக்கும் என அவர் கூறினார். இதற்கு முன்னதாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியான உடனே, கவலையில் ஆழ்ந்த பெங்களூர் அணி ரசிகர்கள் தங்களது சோகத்தையும், ஏமாற்றத்தையும் ட்விட்டரில் பதிவிட்டு அதை ட்ரெண்டாக்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement